புதிய தலைமுறை ராக்கெட்டுகள்: விண்ணில் செலுத்துகிறது சீனா

china_flag_001சக்தி வாய்ந்த என்ஜின்கள் பொருத்தப்பட்ட புதிய தலைமுறை ராக்கெட்டுகளை விரைவில் விண்ணில் செலுத்தவிருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன விண்வெளி ஏவுத் தொழில்நுட்பக் கழகத் தலைவர் டான் யாங்குவா கூறியதாவது:

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, 120 டன் உந்துசக்தி கொண்ட என்ஜின்கள் பொருத்தப்பட்ட “லாங் மார்ச் 6′ ரக ராக்கெட்டை இந்த ஆண்டு மத்தியில் விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

“லாங் மார்ச் 7′, மிக அதிக சக்தி கொண்ட “லாங் மார்ச் 5′ ரகங்களைச் சேர்ந்த ராக்கெட்டுகள் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும்.

இவற்றிலும் புதிய என்ஜின்கள் பொருத்தப்படும் என்றார்.

ராணுவத்துக்கு அடுத்தபடியாக விண்வெளி ஆராய்ச்சித் துறைக்கு சீனா அதிக நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.

நிலவில் இறங்கி, ஆய்வுகள் மேற்கொண்ட பிறகு மீண்டும் பூமிக்குத் திரும்பும் விண்கலனை அந்த நாடு வடிவமைத்து வருகிறது.

மேலும், சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் ஒன்றையும் விண்ணில் நிறுவ சீனா முடிவு செய்துள்ளது.

இவற்றை விண்ணில் செலுத்துவதற்கு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சக்தி வாய்ந்த என்ஜின்கள் உதவும்.

-http://www.dinamani.com