கரீபியன் கடல் பகுதியில் 1,000 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

drugகரீபியன் கடல் பகுதியில் 1,000 கிலோ எடை கொண்ட “கொக்கேய்ன்’ போதைப் பொருளை கனடா, அமெரிக்கா கடற்படையினர் கைப்பற்றினர்.

போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பன்னாட்டு ரோந்துப் பணியின்போது இந்த போதைப் பொருள் சிக்கியது.

போதைப் பொருளை ஏற்றி வந்த படகில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு, அமெரிக்கக் கடற்படைக் கப்பலில் ஏற்றப்பட்டனர்.

கண்காணிப்பு விமானத்தின் உதவியுடன் அமெரிக்க கடலோரக் காவல் படையினர் 530 கிலோ எடைகொண்ட போதைப் பொருளை கடந்த பிப்ரவரி மாதம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

-http://www.dinamani.com