கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்யுமாறு கோரிக்கை?

gotabhaya-rajapakseமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய நிறைவேற்றுப் பேரவையில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அவன்ட் கார்ட் ஆயுதக் கப்பல் தொடர்பில் விசாரணை நடத்த கோத்தபாயவை கைது செய்ய வேண்டுமென தேசிய நிறைவேற்றுப் பேரவை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரித்தானிய விஜயத்தைத் தொடர்ந்து இது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.

அவன்ட் கார்ட் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க யோசனை முன்வைத்துள்ளார்.

அவன்ட் கார்ட் சம்பவம் தொடர்பில் தேசிய நிறைவேற்றுப் பேரவையில் விரிவாக பேசப்பட்டது என ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

தேசிய நிறைவேற்றுப் பேரவை நேற்று கூடிய போது இந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்சவை நாடு கடத்தவேண்டும்!- இலங்கை பொலிஸ்

basilஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை அமெரிக்காவில் இருந்து நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது

முன்னைய அரசாங்கத்தின் ஊழல்கள் மற்றும் மோசடிகளை கண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நிதி மோசடி பொலிஸ் விசாரணை பிரிவு இந்தக் கோரிக்கையை சட்டமா அதிபரிடம் விடுத்துள்ளது.

திவி நெகும திட்டத்தின்போது பசில் ராஜபக்ச பாரியளவு நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பில் முழுமையான தகவல்களை திரட்டுவதற்கு பசில் ராஜபக்சவை விசாரணை செய்ய வேண்டியுள்ளதாக நிதி மோசடி தொடர்பான பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: