புதிய ரணில் அரசு உயர்பாதுகாப்பு வலயமென விடுவிப்பது மக்கள் வாழ்வதற்கான எந்தவொரு அடிப்படை வசதிகளையும் கொண்டிராத வளலாய் என்பது உறுதியாகியுள்ளது.அவ்வகையினில் யாழ்ப்பாணம்
உயர்பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட ஆயிரம் ஏக்கர் காணி விடுவிக்கப்படப்போவதாக அரசு வளலாய் பகுதியினை அடையாளப்படுத்தியுள்ளதுடன் நிலையில், இந்த மாத இறுதிக்குள் அக்காணிகளில் பொதுமக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்தில் மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இன்று புதன்கிழமை ) இடம்பெற்றது. இதன்போது ஆறு கிராமஅலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த ஆயிரம் ஏக்கர் காணியில் 1,353 குடும்பங்கள் மீள்குடியேறவுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் குடியிருப்புக் காணிகள் மற்றும் விவசாய நிலங்கள் என்பன இதற்குள் அமைந்துள்ளன. இதன் முதற்கட்டமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13) வளலாய் ஜே – 284 கிராமஅலுவலர் பிரிவிலுள்ள 232 ஏக்கர் காணிகளை பார்வையிடுவதற்காக 272 குடும்பங்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர். கோப்பாய் பிரதேச செயலகத்தில் பதிவுகளை மேற்கொண்ட 272 குடும்பங்களும் வெள்ளிக்கிழமை (13) அங்கு சென்று தங்கள் காணிகளை பார்வையிட்டு காணிகளை துப்பரவு செய்யலாம். 272 குடும்பங்களில் 253 குடும்பங்கள் யாழ். மாவட்டத்தில் வசிக்கின்றன மிகுதி 19 குடும்பங்களும் வெளிமாவட்டங்களில் வசிக்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னைய மஹிந்த அரசு காலத்திலும் இதே பகுதியினை விடுவித்து சர்வதேசத்தை ஏமாற்ற முயற்சிகள் நடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-http://www.pathivu.com