தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வை மோடி பெற்றுக் கொடுக்க வேண்டும்: சீ.வி.கே மற்றும் இராசகுமாரன்

cvk_rasakumaran_001இந்திய பிரதமரின் விஜயம் மகிழ்ச்சியான விடயம். அதனை மனதார வரவேற்கின்றோம். எனினும் தமிழ் மக்களின் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை உருவாக்கப் போகின்றது என கல்வியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்திய பிரதமர் மோடியின் வருகை தொடர்பில் லங்காசிறி தொலைக்காட்சிக்கு கருத்து தெரிவித்தபோதே கல்வியாளர் இராசகுமாரன் மற்றும் வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=pP8rKBI8Knkகுறித்த விடயம் தொடர்பாக மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

மீள்குடியேற்றம், அரசியல் கைதிகள் விடுதலை, 13 அமுல்படுத்துவதோ, இதற்கு அப்பால் இந்தியா ஈழத்தமிழர் நிலையான சமாதானத்தை உருவாக்குவதாக அமைய வேண்டும்.

நாம் எதிர்பார்ப்பது. ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க வழிசமைக்க வேண்டும். ஈழத்தமிழர்கள் சுய நிர்ணய உரிமையுடன் கூடிய இனம்.

அந்த இனத்தின் வாழ்வுக்கு சுதந்திரமான சூழல் உருவாக வேண்டும். காணிகளை விடுவதோ, சிறைக் கைதிகளை விடுவிப்பதோ சிறிய விடயம்.

மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. 13ஐ நடைமுறைப்படுத்துவது என்பது சாதாரண விடயம். இதனை இந்தியப் பிரதமர் மூலம்தான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வாக அவர்கள் ஒரு சுயநிர்ணயத்துடன் கூடிய இனம் என்பதை ஏற்றுக்கொண்டு அவர்கள் எல்லா வகையிலும் சுதந்திரமாக வாழ்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதே எங்களுடைய எதிர்பார்ப்பாகும்.

மேலும் எங்களுடைய போராட்ட வரலாற்றை எடுத்துப் பார்ப்போமாக இருந்தால், ஈழமக்களுடைய போராட்ட வரலாற்றிலே இந்தியாவினுடைய பங்கு அளப்பெரியதாக இருந்திருக்கின்றது.

இப்பொழுதும் வடக்கு, கிழக்கு மக்கள் இந்தியாவின் மீது பெரும் நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்தியா எமக்காககப் பல விடயங்களைச் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே இந்தியப் பிரதமர் சிறு அல்லது அற்பமான விடயத்தை விடுத்து இலங்கையிலே இருக்கின்ற தமிழ் பேசும் மக்களுக்கான நிரந்தரத் தீர்வை இராஜதந்திர ரீதியிலே மிகப்பெரிய அழுத்தத்தைப் பயன்படுத்தி அல்லது,

தன்னுடைய நட்பு ரீதியிலான உறவைப் பயன்படுத்தி இலங்கை அரசு மீது தமது செல்வாக்கால் நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது என தெரிவித்தனர்.

-http://www.tamilwin.com

TAGS: