13ம் திருத்தச் சட்டம் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கவில்லை என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், இந்தியப் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று நண்பகல் யாழ் பொதுநூலகத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போதே வடக்கு முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு 13ம் திருத்தச் சட்டம் இறுதித் தீர்வுத் திட்டமாக அமையாது.

13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற பிரதமர் மோடியின் பரிந்துரை வரவேற்கப்பட வேண்டியது. ஆனால், நிரந்தரத் தீர்வுத் திட்டத்தை எட்ட இன்னமும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொள்ளாது 13ம் திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
-http://www.tamilwin.com

























