ஈழ விடுதலையை அழிக்கத் துடிக்கும் அயோக்கிய அமெரிக்க தூதரகம் முற்றுகை! 200க்கும் மேற்பட்டவர்கள் கைது

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற 200 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மே 17 இயக்கம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் இந்த முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றன.

இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுவதாகவும், போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா. அறிக்கை வெளியிட தாமதமாக அமெரிக்காதான் காரணம் என்றும், முற்றுகையில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

உலகின் 45% அதிகமான கடல் வழி வியாபாரம் நடக்கும் இந்திய பெருங்கடல்  என்ற தமிழர் கடலை அடைய நினைத்த அமெரிக்கா அதற்காக இலங்கையை தனது கட்டுக்குள் கொண்டுவர 1956லிருந்து வேலை செய்ய ஆரம்பித்தது.இலங்கைக்கு முழு உதவியும் செய்து தனது கட்டுக்குள் கொண்டுவர நினைத்த அமெரிக்காவுக்கு இலங்கையில் தமிழர்கள் தங்கள் உரிமைக்காக போராடுவது இடைஞ்சலை கொடுக்கிறது.
எனவே தமிழர்களின் போராட்டத்தை நசுக்க நினைத்த அமெரிக்கா இலங்கையோடு சேர்ந்து அனைத்து வேலைகளையும் செய்கிறது.

அதில் ஒரு பகுதி தான் 2002ல் இருந்த அமைதி ஒப்பந்தத்தை முறிக்கவைத்து போருக்கு வழிவகுத்தது. இதன் விளைவாகவே 2009ல் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஈழத்தமிழர்களை இலங்கை அரசு இனப்படுகொலை செய்தது.இதற்கு  இராணுவ உதவி முதல் பண உதவி வரை பலவிதங்களில் அமெரிக்கா உதவியது. இதனை தான் கடந்த 2013 டிசம்பரில் ஜெர்மன் பிரேமன் நகரில் நடந்த மக்கள் தீர்ப்பாயம் ஆதாரத்துடன் சொன்னது..

போருக்கு பின் பல்வேறு சர்வதேச நெருக்கடிகள் இலங்கைக்கு வர அதலிருந்து இலங்கையை காப்பாற்ற உள்நாட்டு விசாரணை என்ற கொலையாளி தன்னைதானே விசாரிக்கட்டும் என்ற அயோக்கியத்தனமான தீர்மானத்தை ஐநா அவையில் 2012ல் அமெரிக்கா முன்வைத்தது.

ஆனால் தனது கட்டுக்குள் இருப்பார் என்று நினைத்த இராஜபக்சே சீனாவின் பக்கம் போகிறார் என்றவுடன் அவரை மிரட்டவும் அதே நேரத்தில் தமிழர்களின் கோரிக்கையை சிதைக்கவும் நினைத்த அமெரிக்கா தமிழர்களை  மதசிறுபாண்மையினர் என்றும் அங்கு இரு தரப்பும் தவறு செய்தார்கள் என்றும் சொல்லி ஒரு விசாரனைவேண்டுமென்று 2014ல் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது.

அந்த தீர்மானத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று அதன் அறிக்கை வருகிற 2015 மார்ச்சில் தாக்கல் ஆக்ப்போகிற சூழ்நிலையில் இலங்கையில் இராசபக்சேவை மாற்றி சிறீசேனா என்ற அமெரிக்க ஆதரவு நபர் அதிபராக வந்தவுடன் அந்த அறிக்கையை இப்போது வெளியிட வேண்டாமென்று ஐநா சபையின் மனித உரிமை கவுன்சிலுக்கு அழுத்தம் கொடுத்து அந்த அறிக்கையை ஆறு மாதகாலம் தள்ளிவைக்க வைத்துவிட்டது.

இந்த காலமாதத்தை பயன்படுத்தி இலங்கை அரசு  தன்னைதானே அதாவது கொலையாளி தன்னை தானே விசாரிக்கும் உள்நாட்டு விசாரனையை ஆரம்பிக்க அனைத்து வேலையையும் செய்கிறது அந்த விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவளித்திருக்கிறது.

இதனால் தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றவாளிகள் எளிதாக தப்பித்துக்கொள்ள வழியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது அமெரிக்கா.

மேலும் ஐநா அவையில் இனப்படுகொலைக்கு நீதியாக தமிழர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய பொதுவாக்கெடுப்பினையும் தனது அயோக்கியத்தனத்தால் தடுத்து வைத்திருக்கிறது அமெரிக்கா.

இவ்வளவு அயோக்கியத்தனத்தையும் செய்த அமெரிக்காவை தமிழர்கள் நெருக்கடிக்குள்ளக்குவதற்காகவே அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடுகிறோம்.

ஈழவிடுதலையை தடுக்க நினைக்கும் அமெரிக்காவின் மீது பொருளாதார போர் தொடுப்போம் KFC, PEPSI, COLA போன்ற பொருட்களை புறக்கணிப்போம்.

ஈழ இனப்படுகொலையில் கூட்டு குற்றவாளிகளான அமெரிக்கா இந்தியா இங்கிலாந்து அதிகாரிகளை விசாரிக்க கோருவோம்.

2009 இனப்படுகொலைக்கு நீதி கேட்டு நாம் வீதிக்கு வந்தோம்.அதில் ஒரு பொழுதும் சமரசம் கிடையாது. ஈழ விடுதலை அடையும் வரை தமிழகத்தமிழர்கள் ஓயப்போவதில்லை என்பதை உலகிற்கு உணர்த்துவோம்.

-http://www.pathivu.com

TAGS: