டெல்லியே எல்லாவற்றையும் தீர்மானித்தது! வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன்!!

wegneswaran-1409132மோடி விஜயத்தின் போது எங்களுடைய உண்மையான மனோநிலையினை கூட அவருக்கு எங்களால் எடுத்துக்காட்ட முடியவில்லை. அவர்களே கூட்டி வந்து அவர்களே அழைத்துச் செல்வது போல இருந்ததே தவிர இங்கு வந்த பிரதமரை நாங்கள்  அழைத்துச் சென்றோம்  என்று இருக்கவில்லை. அனைத்தையும்  டெல்லியே ஏற்பாடு செய்திருந்தது என கவலை வெளியிட்டுள்ளார் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன்.

யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த இந்திய பிரதமர்  நரேந்திர மோடிக்கு உhயி வரவேற்பினை வழங்கவில்லையென்ற கருத்தை எதிர்கட்சி தலைவர் தவராசா முன்வைத்திருந்தார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி  வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள்  உட்பட  பலர்  பாதுகாப்பு பிரிவினரால்  அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.

இதனால்  எங்களுடைய உண்மையான மனநிலையை கூட  வெளிப்படுத்த முடியவில்லை.

இந்திய பிரதமரின் வருகை குறித்து இந்திய தூதரகமே எமக்கு அறிவித்திருந்தது. எனினும்  பிரதமரின்  நிகழ்ச்சி நிரல் குறித்து டெல்லியே தீர்மானிக்கின்றது என்றும்  அங்கிருந்தே ஏற்பாடுகள்  நடைபெறுகின்றது என்றும்  எமக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் பிரதமரின் நிகழ்ச்சி நிரல் குறித்து எமக்கு அறிவிக்கப்படவில்லை. இறுதிநேரத்திலேயே நிகழ்ச்சி நிரல்  வெளியிடப்பட்டது. அதற்கமைய யாழ். பொது நூலகத்தில்  இடம்பெற்ற நிகழ்வில் நாங்கள்  கலந்து கொண்டிருந்தோம்.

எனினும் அங்கு பிரதமரை வரவேற்கும்  உரை கூட ஏற்பாடு செய்யப்படவில்லை. அந்தநேரத்தில்  யாழ். இந்திய துணைத்தூதரக தூதுவரை அனுகி  இங்குவந்துள்ள பிரதமருக்கு வரவேற்பு உரை கூட எங்களால் கூற முடியாதா என கேட்டோம்.

டெல்லியிடம் கேட்டே பதில் கூற வேண்டும் என அவர் எங்களிடம்  தெரிவித்திருந்தார். இறுதிநேரத்திலேயே வரவேற்பு உரை வழங்க அனுமதிக்கப்பட்டோம் . அத்துடன்  பிரதமருக்கு வழங்கவென எங்களால் பரிசுப்பொருள் ஒன்றும்  கொண்டு சென்றோம். ஆனால்  அதனைக் கூட உள்ளே கொண்டு செல்ல எமக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அத்துடன் பலரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. நாங்களும்  கட்டுப்படுத்தப்பட்டோமெனவும் அவர் தெரிவித்தார்.

-http://www.pathivu.com

TAGS: