மைத்திரி அரசு தமிழ் மக்களிற்கு எதிரான காணி ஆக்கிரமிப்புக்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்!

suresh_premachanran_1.pngமகிந்த அரசைப் போன்று அல்லாமல் ஜனநாயக ஆட்சி நடத்துவதாக காட்டிக் கொண்டு வருகின்ற மைத்திரி அரசு தமிழ் மக்களிற்கு எதிரான காணி ஆக்கிரமிப்புக்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இல்லையேல் மகிந்த அரசிற்கு எதிராக முன்னெடுத்த போராட்டங்கள் போன்று மைத்திரி அரசிற்கு எதிராகவும் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி ஏற்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களின் காணி அக்கிரமிப்புக்கள் அபகரிப்புக்கள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துமென்று மீள்குடியேற்ற அமைச்சரிடம் முறையிட்டிருக்கின்றோம். ஆகவே இதனை அரசு புரிந்து கொண்டு செயற்பட வேண்டுமென்று கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளரும் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

புதிய அரசின் ஆட்சிக் காலத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காணி ஆக்கிரமிப்பு மற்றும் அபகரிப்பு தொடர்பாக கருத்து வெளியிடுகiயிலையே மெற்கண்டவாறு சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னைய அரசு ஏற்கனவே தமிழ் மக்களின் பல ஆயிரக்கணக்கான நிலங்களை அபகரித்தும் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றது.

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் எந்த வித அனுமதியுமின்றி பலாத்காரமாகவே பறித்து எடுத்திருக்கின்றதாகவே கூறுகின்றனர்.

இந்நிலையில் ஆட்சி மாற்றமொன்று நாட்டில் ஏற்பட்டிருக்கின்றது. அந்த ஆட்சியானது சட்ட ரீதியாகவும், ஐனநாயக ரீதியாகவும் செயற்படுவதாக உள்நாட்ல் தெரிவித்து வருகின்ற அதே வேளையில் உலக நாடுகளுக்கும் அதனைவே சொல்லி வருகின்றது.

ஆனால் கடந்த அரசாங்கம் மேற்கொண்ட தமிழ் மக்களின் காணிப்பறிப்புக்கள், ஆக்கிரமிப்புக்கள் தற்போதும் நிறுத்தப்படவில்லை. இன்றும் அதே போன்றதான நடவடிக்கைகள் புதிய அரசின் ஆட்சியிலும் தொடர்பது மிகுந்த கவலையளிப்பதாக இருக்கின்றது.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி மாவட்டத்தின் திருவையாறு. யாழ் மாவட்டத்தின் வடமராட்சி கிழக்கு ஆகிய பகுதிகளில் இவ்வாறு காணி ஆக்கிரமிக்கும் பணிகள்

முன்னெடுக்கப்படுகின்றது. இராணுவத்தினரின் தேவைகளுக்கு இராணுவத்தினரின் துணையுடன் காணி அளவிடும் அதிகாரிகளினால் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் இத்தகைய பிரச்சனைகள் தொடர்பாக மீள்குடியேற்ற அமைச்சர் எ.எம்.சுவாமிநாதனிடம் முறையிட்டிருக்கின்றேன். அதாவது கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டது போன்று இந்த ஆட்சியிலும் காணிகளை அபகரிப்பது மற்றும் ஆக்கிரமிப்பது பாரதூரமான செயற்படாகவே கருதப்படுகின்றது.

ஆகவே இந்த அரசிலும் இத்தகைய செயற்பாடுகள் நடைபெறக் கூடாது. ஏனெனில் கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராகவே ஆட்சி மாற்றமொன்றை தமிழ் ஏற்படுத்தியிருந்தனர். இவ்வாறு தமிழ் மக்கள் கொண்டு வந்த இந்த அரசு அந்த மக்களுக்கு எதிராகவே செயற்பட முடியாது.

குறிப்பாக கடந்த அரசாங்கம் மேற்கொண்ட காணி பறிப்புக்கள் ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக தமிழ் மக்கள் போராட்டங்களை மேற்கொண்டு சிலதை நிறுத்தியிருந்தனர். ஆகவே இவ்வாறான செயற்பாடுகளை புதிய அரசும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இதனை விடுத்து புதிய அரசும் காணி ஆக்கிரமிப்பு அல்லது அபகரிப்புக்களை தொடருமாயின் இந்த அரசிற்கு எதிராகவும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். ஆகவே இத்தகைய நிலைமைகளைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் நிறுத்திக் கொள்ளாது விட்டால் தொடர் போராட்டங்களை நடத்த நடத்த வேண்டி ஏற்படுமென்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

-http://www.tamilcnnlk.com

TAGS: