இலங்கையில் தேர்தலுக்குப் பின்னர் மத சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் சகிப்புத்தன்மையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சர்வதேச மதசுதந்திரம் குறித்த அமெரிக்க ஆணைக்குழு இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளது.
குறித்த குழுவினர் தங்களது மூன்று நாள் பயணத்தின்போது வெளிவிவாகர அமைச்சர் உட்பட பலரை சந்தித்து உரையாடினர். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் நம்பிக்கையளிப்பவையாக காணப்பட்டதாக அக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கையின் அனைத்து மதத்தினர் மற்றும் இனத்தினர் மத்தியிலும் நல்லிணக்கம் அவசியம் என தெரிவிக்கப்பட்ட கருத்துக்களையும் நாங்கள் வரவேற்கின்றோம்.
பேரழிவை ஏற்படுத்திய யுத்தத்திற்கு பின்னர் கடந்த சில வருடங்களில் சிறுபான்மை மதத்தவர்கள் தாக்கப்படுகின்றனர் எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
புதிய அரசாங்கம் மதச் சிறுபான்மையினருடன் பேச்சுக்களை மேற்கொள்வது தேசிய ஐக்கியத்தை நோக்கிய சிறந்த விடயம் என அமெரிக்க ஆணைக்குழுவின் ஆணையாளர் எரிக் ஸ்வார்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை மதத்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் கடந்த சில மாதங்களில் குறைந்துள்ளன என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகின்றோம்.
இவ்வாறான குற்றச்செயல்களுக்கு காரணமாணவர்களை நீதியின் முன்நிறுத்துமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம். பொறுப்புக்கூறல் என்பது பாதுகாப்பையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்ல நம்பிக்கையும் அளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com


























அமெரிக்க தன் சுய புத்தியை காட்டிவிட்டது.சுயநலத்துக்காக பல லச்ச அப்பாவி ஈழ மக்கள் சிங்களவன் படுகொலை செய்ததை மறந்து அறிக்கை விடுகிறது.ஈழ மக்களின் உயிர் அவ்வளவு மலிவா?