“தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மாத்திரமே பாட வேண்டும். இலங்கை என்பது ஒரே தேசம், ஒரே கொடி, ஒரே கீதம். அதனை யாராலும் வேறுபடுத்த முடியாது.” – இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
பொதுபலசேனா அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நினைத்ததை எல்லாம் செய்ய முடியாது. அதற்கான அதிகாரத்தை இதுவரை யாரும் வழங்கவில்லை. முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஞாயிற்றுக்கிழமை பதவி உயர்வு வழங்கப்படுகின்றது.
யுத்த வெற்றிக்காக அவர் மட்டுமா பாடுபட்டார்? வான்படை, கடற்படைத் தளபதிகள் பாடுபடவில்லையா? அவ்வாறிருக்க சரத் பொன்சேகாவுக்கு மாத்திரம் பதவி உயர்வு வழங்குவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?” – என்று கேள்விகளை அடுக்கி அடுக்கிக் கேட்டார் ஞானசார தேரர்.
-http://www.tamilcnnlk.com
இலங்கையில் குடியேறி தமிழில் தேசிய கீதம் பாடுவதா? விட்டால் இலங்கையே உங்களுடையது என சொல்லுவிங்கே போலும்.உங்களால் ஒன்னும் பு…முடியாது.இந்தியா இருக்கும் வரை ,எங்களை ஒன்னும் பு…முடியாது.வாழ்க சிங்களம்.வாழ்க வட இந்தியம்.
அட மாங்கா.தமிழர்கள் குடிஏறியவர்களா?வறலாரு படிக்காத கூமுட்டை!