அமெரிக்க இராணுவத்தின் 100 பேரைக் குறிவைத்து பெயர் விபரங்களை வெளியிட்டுள்ள ஐ.எஸ்.ஐ!

isis-india2தம்மால் கொல்லப்பட வேண்டியவர்கள் எனக் குறிப்பிட்டு 100 அமெரிக்கர்களின் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை, ஐ.எஸ்.ஐ அமைப்பினர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் தமது சகோதர்கள் இவர்களை குறிவைக்க வேண்டும் என அத்தகவல்கள் கூறுகின்றன.

இத்தகவல்களின் உண்மைத் தன்மைக் குறித்து தெரியாத போதும், விசாரணையை முடக்கி விட்டிருப்பதாக பெண்டகன் பாதுகாப்பு மையம் அறிவித்துள்ளது.

ஐ.எஸ்.ஐ வெளியிட்டுள்ள இத்தகவல்களில் இஸ்லாமிய தேசம் ஹேக்கிங் டிவிஷன் எனக் குறிப்பிட்டு, அவர்களால் ஹேக்கிங் செய்யப்பட்ட பல நூற்றுக்கணக்கான அமெரிக்க இராணுவ சேர்வர்களின் தகவல்கள், தரவுகள், மின் அஞ்சல் முகவரிகள் என்பனவும், அமெரிக்க இராணுவத்தினர் 100 பேரின் பெயர் விபரங்களும் பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளன.

எனினும் அமெரிக்கா வெளியிட்டுள்ள பதில் அறிக்கைகளில், ஐ.எஸ்.ஐ அமைப்பினர் இத்தகவல்களை ஹேக்கிங் செய்து தான் சேமித்திருப்பார்கள் என்றில்லை. இவற்றில் பெரும்பாலானவை பகிரங்கப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கிடைக்கப்பெற்றவையாக இருக்கலாம் எனக் கூறியுள்ளது.

-http://www.puthinamnews.com