என் மகள் அடித்துக்கொல்லப்பட்டதை வேடிக்கை பார்த்த பொலிஸ்: தந்தை கதறல்

afganwomen_father_001ஆப்கானிஸ்தானில் கல்லால் அடித்து கொல்லப்பட்ட பெண்ணின் தந்தை உருக்கத்துடன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில்(Kabul) உள்ள மசூதியின் அருகே பார்குந்தா(Farkhunda Age-27) என்ற இளம்பெண்ணை, அப்பகுதியை சேர்ந்த கும்பல் ஒன்று, கல் மற்றும் கம்பால் அடித்து தாக்கியுள்ளது.

அப்பெண் குரானை எரித்ததாக அவர் மீது குற்றம்சாட்டி அவரை ஆற்றின் ஓரத்தில் தூக்கி எரிந்து, தீ வைத்து எரித்து கொலை செய்துள்ளது.

ஆனால் அவர் மீது சாட்டப்பட்ட குற்றங்களுக்கு எந்த ஒரு ஆவணமும் இல்லை என்றும் அவர் அப்பாவியான பெண் எனவும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய முகமது ஜாகீர்(Muhammed Zaheer) என்ற பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்

இந்நிலையில் பார்குந்தாவை பாதுகாக்க பொலிசார் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து அவளது தந்தை கூறுகையில், எனது மகள் மீது தவறில்லை என நானும் என் மனைவியும், அந்த கும்பலிடம் கூறியபோது அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

மேலும் என் மகள் அடித்துக் கொல்லப்பட்டபோது பொலிஸ் அதிகாரிகள் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

-http://world.lankasri.com