இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கிடம் செய்தியாளர்கள் பக்கத்தான் ரக்யாட்டின் எதிர்காலம் பற்றி வினவினர்.
“எதிர்காலம்? எனக்குத் தெரியாது”, என்றவர் ஹாடி சுருக்கமாக பதிலளித்தார்.
ஹுடுட் சட்டவரைவைக் கொண்டுவருவதில் பாஸ் கட்சி முனைப்பாக இருப்பதால் பக்கத்தான் ரக்யாட் கூட்டணியில் டிஏபி மற்றும் பிகேஆருடனான அதன் உறவுகள் நலிவடைந்துள்ளன. ஹுடுட் சட்டத்தைக் கொண்டுவரும் பாஸின் முயற்சி பக்கத்தான் கூட்டணியின் பொதுவான கொள்கைக்கும் அரசமைப்புக்கும் முரணானது என டிஏபியும் பிகேஆரும் வாதிடுகின்றன.
அவற்றின் குறைகூறல்கள் ஜூன் மாத பாஸ் தேர்தலில் அவரின் தலைவர் பதவியைத் தற்காத்துக்கொள்ளும் முயற்சிக்குப் பாதகமாக அமையுமா என்றும் ஹாடியிடம் வினவப்பட்டது.
“பாஸ் உறுப்பினர்களை எவரும் திசை திருப்ப முடியாது”, என்றவர் மறுமொழி கூறினார்.
உம்முடைய எதிர்காலமே கேள்விக் குறியாகி விட்டபொழுது பக்கத்தான் ரக்யாட்டின் எதிர்காலம் பற்றி தங்களுக்கு கவலை ஏன் வரவேண்டும்?.
சமயத்தை பயன் படுத்தி மலிவு அரசியல் செய்யும் உ உமக்கு எப்படி ஐயா விளங்கும்?
கிழிச்சே,, உன் எதிரிகாலமோ டப்பா டான்ஸ் ஆடுது