சுமார் ஒரு டஜன் போலீசாரும் மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணைய (எம்சிஎம்சி) அதிகாரிகளும் த மலேசியன் இன்சைடர்(டிஎம்ஐ) அலுவலகத்தில் இன்று மாலை அதிரடிச் சோதனை ஒன்றை நடத்தினார்கள்.
டிஎம்ஐ நிர்வாக இயக்குனர் லையோனல் மொராய்ஸ், சுல்கிப்ளி சூலோங் ஆகியோர் தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
ஹுடுட் சட்டம்மீது ஆட்சியாளர் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டதாக அதில் வந்த தப்பான செய்தி குறித்து நாடாளுமன்றத்தில் பிஎன் எம்பிகள் முறையிட்டதை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இவ்விவகாரம் குறித்து அரச முத்திரை காப்பாளரும் கடந்த வாரம் போலீசில் புகார் செய்திருந்தார்.
வரட்டும் பார்ப்போம்.