அமெரிக்கா நிகழ்த்தி வரும் வான்வழித் தாக்குதல்களையும் மீறி, ஐஎஸ் அமைப்பு தன்னை விரிவுபடுத்தி வருகிறது என்று சிரியா அதிபர் பஷார் அல் அஸாத் தெரிவித்தார்.
இது தொடர்பாக சிபிஎஸ் நியூஸ் என்ற ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
இராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகள் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் கடந்த ஆண்டு முதல் வான்வழித் தாக்குதல்களை
நடத்தி வருகின்றன.
எனினும், அந்த அமைப்பு தொடர்ந்து ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. சிரியாவில் ஒவ்வொரு மாதமும் 1,000 பேரை ஐ.எஸ். சேர்த்து வருவதாக சில மதிப்பீட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த வான்வழித் தாக்குதல்கள் தொடங்கியதில் இருந்தே ஐ.எஸ். அமைப்பு தன்னை விரிவுபடுத்தி வருகிறது. லிபியாவிலும் அந்த அமைப்பு கிளையைத் தொடங்கியுள்ளது.
மேலும் எகிப்து, யேமன் ஆகிய நாடுகளில் உள்ள பயங்கரவாத அமைப்புகள், ஐ.எஸ். அமைப்புக்கு தங்கள் விசுவாசத்தைத் தெரிவித்துள்ளன என்றார் அவர்.
-http://www.dinamani.com