அல்டான்துன்யா ஷாரீபு கொலைக்கு உடந்தையாக இருந்த அப்துல் ரசாக் பகிண்டா விடுவிக்கப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்யாததற்கு புத்ரா ஜெயா கொடுத்த விளக்கம் திருப்தியளிக்கவில்லை என எதிரணி எம்பிகள் இருவர் கூறினர்.
“அமைச்சரின் பதில் வழக்கத்துக்கு மாறானதாகவும், முரண்பாடு மிக்கதாகவும், அரைவேக்காட்டுத்தனமாகவும் இருக்கிறது. அதற்குக் கூடுதல் விளக்கம் தேவை.
“முதலில் ‘போதுமான ஆதாரங்கள் இல்லை’ என்றால் அப்துல் ரசாக் கொலைக்கு உடந்தை என்று ஏஜி அலுவலகம் ஏன் வழக்கு தொடுக்க வேண்டும்?”, என தைப்பிங் எம்பி ங்கா கோர் மிங் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வினவினார்.
அக்கூட்டத்தில் பொக்கோக் சேனா பாஸ் எம்பி மாபுஸ் ஒமாரும் கலந்து கொண்டார்.
திங்கள்கிழமை, நடப்பில் சட்ட அமைச்சர் நன்சி ஷுக்ரி ங்காவுக்கு அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால்தான் அப்துல் ரசாக் விடுவிக்கப்பட்டார் என்று கூறியிருந்ததுதான் இந்த எம்பிகளுக்கு மனநிறைவை அளிக்கவில்லை.
கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதற்கு முறையான விளக்கம் தேவை என்று மாபுஸ் கூறினார்.
“முடிவு கொலையுண்டவர் குடும்பத்துக்கு நியாயம் செய்வதாக இருத்தல் வேண்டும். விடை கிடைக்காத கேள்விகளுக்கு விளக்கமளிக்கப்பட வேண்டும்”, என்றாரவர்.
ஒரே விளக்கம் அதில் மற்ற யார் சம்பத்தப்பட்டிருக்கின்றனர்? இன்று இந் நாட்டில் என்ன நடக்கின்றது? எப்படியாகிலும் எல்லா எதிர்ப்புகளையும் அடக்கு முறையில் உண்மையாக்கவே எல்லாம். அதிலும் அம்னோ குண்டர்களும் நீதி நாயகனும் அநீதியை ஆற தழுவி முத்த மழை பொழிந்து கொண்டிருக்கின்றனர்.
இக்கொலைக்கான காரணம் யாது??? மலேசியா மண்ணில் அன்னியர் ஒருவர் இந்நாட்டு போலீசாரால் கொலை செய்யப்படக் காரணம்? இந்நாட்டு குடிமகனாக நான், இந்நாட்டு போலீசார் அன்னியரை கொலை செய்துள்ளார் என்பதை அறிந்து வெட்கப் படுகிறேன்.. கொலை செய்த போலீசாருக்கும் அல்தாந் துன்யாவுக்கும் உள்ள தொடர்பு என்ன??? பதில் அடுத்த அரசியல் ஜென்மத்தில்தான் கிடைக்கும் போலிருக்கிறது.
அவனை உள்ளுக்க போட்டா வெளியில உள்ளவன் டப்பா ஆடிடும். அதான்.
திருடன் வெளியே திருடாதவன் உள்ளே…..