ஒரு வாரத்தில் மடிந்த 62 குழந்தைகள்: அதிர்ச்சி தகவல்

yemen62killed_001ஏமனில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் கடந்த வாரம் மட்டும் 62 குழந்தைகள் பலியாகியுள்ளதாக யுனிசெப்(UNICEF) அறிவித்துள்ளது.

ஏமன் நாட்டின் தலைநகரான சனா உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதால் அந்நாட்டில் உள்நாட்டு போர் உச்சகட்டத்தை அடைந்தது.
அந்நாட்டு அதிபர், கிளர்ச்சியாளர்களை ஒடுக்க உதவுமாறும் சவுதி அரேபியாவிற்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அவரது வேண்டுகோளை ஏற்று, ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் வான் வழி தாக்குதலை கடந்த 27-ஆம் திகதி தொடங்கின.

இதில் கிளர்ச்சியாளர்கள் பலர் கொல்லப்பட்டதுடன், அவர்களின் நிலைகள் குண்டுவீச்சில் அழிக்கப்பட்டன. அதே சமயம் இத்தாக்குதலால் கடந்த வாரத்தில் மட்டும் 62 குழந்தைகள் கொல்லப்பட்டதுடன், 30 பேர் படுகாயமடைந்ததாக ஐ.நா.வுக்கான குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து யுனிசெப் அமைப்பின் ஏமன் பிரதிநிதி ஜூலியன் ஹார்னீஸ் கூறியுள்ளதாவது, குழந்தைகளுக்கு பாதுகாப்பு தருவது மிக அவசியமாகும். இதை அனைத்து தரப்பினரும் உணர்ந்து, குழந்தைகளை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்.

தற்போது நடைபெற்று வரும் தாக்குதல்களால் கல்வி மற்றும் சுகாதாரம் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே ஊட்டச்சத்து குறைபாடுடன் குழந்தைகள் பரிதவிக்கும் நிலையில் உணவு பஞ்சமும் ஏற்பட்டுள்ளதாக யுனிசப் தெரிவித்துள்ளது.

-http://world.lankasri.com