த மலேசியன் இன்சைடர் செய்தியாசிரியர்களைக் கைது செய்யுமாறு “அரசியல் நோக்கம்கொண்ட கட்டளை” எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்று உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறுகிறார்.
அவர்களை விசாரணை செய்யும் பொறுப்பை போலீசிடமே விட்டுவிட்டதாக ஜாஹிட் குறிப்பிட்டார்.
“அவர்களைக் கைது செய்து காவலில் வைக்க வேண்டுமென்று அரசியல் நோக்கில் கட்டளை எதுவும் பிற்ப்பிக்கப்படவில்லை. போலீஸ் தலைவர் உள்பட துறைத் தலைவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைத்து விடுவதுதான் என்னுடைய பாணி.
“அவர்கள் சட்டம் மற்றும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் செயல்படுகிறார்கள்”, என ஸ்ரீ கெம்பாங்கானில் செய்தியாளர் கூட்டமொன்றில் அமைச்சர் கூறினார்.
மகாதீர் இப்போது அந்தான்துயா கொலை வழக்கைப்பற்றி கேள்வி எழுப்பி உள்ளார். என்ன அமைச்சரே, இந்த சீருல் விவகாரம் சிக்கல் நிறைந்தது என்று சொன்ன மாதிரி இப்போது தைரியமாக துன் மகாதீரிடன் சொல்ல தைரியம் உள்ளதா???? டத்தோ ஹைருடின் மீது நடவடிக்கை எடுத்ததுபோல் துன் மீது நடவடிக்கை எப்போது என்று போலிஸ் தலைவரிடம் கேட்டு சொல்லுங்கள்!!!!
அல்தாந்துயாவை கொலை செய்யச் சொன்னது யார் என மகாதிமிருக்கு நன்றாகவே தெரியும். He is waiting for the right time. Time Bomb கூடிய விரைவில் வெடிக்கத்தான் போகிறது.
பகிங்கிர படுத்தும் பத்திரிகைகள் மீது அத்துமீறும் காவல்துறையை இயக்குவது இந்த அமைச்சர் என்பது எல்லாருக்கும் தெரியாமல் இல்லை காரணம் பலமுறை மலேசியாகினி நிருபரை நேராகவே மிரட்டும் தோரணையில் செயல்பட்டதை கேள்விபட்டு இருக்கிறோம் . சும்மா நாடகம் நடத்தி அனுதாபம் தேடுவதே இந்த உள்துறை அமைச்சருக்கு வாடிக்கையாகிவிட்டது .
அப்பு இதெல்லாம் ஒரு நாடகம்தான்…அரசியல் அப்பு…
இந்த ஈன ஜென்மங்களை எப்படி நம்புவது?
எல்லாமே தில்லுமுல்லு. கேட்க நாதி இல்லை.