பயங்கரவாதத்தைக் கண்டு அஞ்சமாட்டோம்: கென்யா அரசு உறுதி

Kenya-Mall-At_Horo2கென்யாவில் 147 மாணவர்கள் உயிரிழக்கக் காரணமான பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டு அஞ்சப் போவதில்லை என அந்த நாட்டு அரசு கூறியுள்ளது.

கென்யாவின் காரிஸா நகர பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் வியாழக்கிழமை அதிகாலை நுழைந்த அல்-ஷபாப் பயங்கரவாதிகள் சரமாரியாகச் சுட்டனர்.

இந்தத் தாக்குதலில் 147 மாணவர்கள் உயிரிழந்தனர். 79 பேர் காயமடைந்தனர்.

கடந்த 1998-ஆம் ஆண்டு கென்யாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் அல்-காய்தா நிகழ்த்திய தாக்குதலில் 213 பேர் கொல்லப்பட்டதற்கு அடுத்தபடியாக, அந்த நாட்டில் நடைபெற்ற மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல் இதுவாகும்.

இந்த நிலையில், கென்ய உள்துறை அமைச்சர் ஜோசப் கைஸ்ùஸரி வெள்ளிக்கிழமை கூறுகையில், “”பயங்கரவாதிகளின் இந்தக் கொடூரச் செயலைக் கண்டு நாங்கள் அஞ்சப்போவதில்லை. பயங்கரவாதத்தை ஒடுக்க நாங்கள் தொடர்ந்து போரிடுவோம்” என்றார்.

சோமாலியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக தாக்குதல் நிகழ்த்தி வரும் ஆப்பிரிக்க யூனியன் கூட்டுப் படையில் கென்யா இடம் பெற்றிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே காரிஸா பல்கலைக்கழத்தில் தாக்குதல் நிகழ்த்தியதாக, அதில் ஈடுபட்ட அல்-ஷபாப் அமைப்பு கூறியுள்ளது.

-http://www.dinamani.com