ரத்தம் சிந்தும் கிறிஸ்துவர்கள்: கொந்தளிக்கும் போப்

pope francisகென்யா பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு போப் பிரான்சிஸ் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

புனித வெள்ளியான நேற்று ரோம் நகரில் உள்ள கொல்லோசியத்தில்(Colosseum) நடந்த சிறப்பு வழிபாட்டில் போப் பிரான்சிஸ் கலந்துக்கொண்டார்.

சிரியா, ஈராக் மற்றும் நைஜீரிய நாட்டு அகதிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

வழிபாட்டிற்கு பிறகு கென்யா பல்கலைக்கழக தாக்குதலை பற்றி பேசிய போப் பிரான்சிஸ், ஏசுநாதர் மீது நம்பிக்கை வைத்துள்ள ஒரே காரணத்திற்காக நம்முடைய சகோதர, சகோதரிகள் ரத்தம் சிந்தி வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த பிப்ரவரி மாதம் லிபியாவில் 22 கிறிஸ்துவர்கள் தலைத் துண்டித்து கொடூரமாக கொல்லப்பட்டதற்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வாடிகன் நகரத்தின் தலைமை போதகரான Raniero Cantalamessa கூறுகையில், கிறிஸ்துவர்களை கொல்வதன் மூலம் உலகில் ஏற்பட்டுள்ள மதவாத பிரிவினையை நான் மிகவும் கண்டிக்கிறேன் என கூறியுள்ளார்.

நேற்று முன் தினம் கென்யா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த அல்-ஷபாப்(Al-Shabab) அமைப்பை சேர்ந்த 5 தீவிரவாதிகள் சுமார் 150 பேரை கொன்று குவித்தனர்.

முன்னதாக, பல்கலைக்கழகத்தில் இருந்த இஸ்லாமியர்களை வெளியேற்றிவிட்டு கிறிஸ்துவர்களை மட்டும் சிறைப்பிடித்து கொன்றது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com