ஏமனில் கிளர்ச்சியாளர்களின் அட்டூழியம்: 53 பேர் பலி

yemen_war_001ஏமன் நாட்டில் நடந்து வரும் உள்நாட்டு போரில் கடந்த 24 மணி நேரத்தில் 53 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏமன் நகரில் உள்ள ஏடென் நகரில் கிளர்ச்சியாளர்களுக்கும் அதிபர் Abedrabbo Mansour Hadi-வின் ஆதரவாளர்களுக்கும் இடையே யுத்தம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

இந்நிலையில் ஏடென் நகரில் இருபிரிவினருக்கு இடையே நடந்த மோதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 53 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில் அப்பாவி பொதுமக்கள் 17 பேரும், 26 கிளர்ச்சியாளர்கள் மற்றும் 10 ஆதரவாளர்கள் இந்த தாக்குதலில் பலியாகியுள்ளனர்.

கடந்த வாரம் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபிய நடத்திய தாக்குதலை சமாளிக்க முடியாமல் தலைதெறிக்க ஓடியது.

கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் அரசு உதவி வருவதாக கூறிவரும் நிலையில், ஏமன் அரசுக்கு உதவுமாறு ஜனாதிபதி, பாகிஸ்தான் அரசை வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில், ஏமன் நாட்டில் அமைதி திரும்பாமல் போர் வலுக்கும் நிலையே ஏற்பட்டுள்ளது.

ஏமனில் உள்நாட்டு போர் மோசமாகி வருவதால், அந்நாட்டிலிருந்து பல்வேறு நாட்டை சேர்ந்த வெளிநாட்டினர், ஏமனை விட்டு வெளியேறி வருகின்றனர்.

ஏமன் நாட்டில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவும் நோக்கில் செஞ்சிலுவை அமைப்பு(Red Cross) இரண்டு விமானங்களை ஏமனிற்கு அனுப்பியுள்ளது.

மேலும் உள்நாட்டு போர் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை சுமார் 500 பேர் தாக்குதலில் பலியாகியுள்ளதாக ஐரோப்பிய மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com