பல்கலைக்கழக தாக்குதல் எதிரொலி: பழிவாங்க தொடங்கிய கென்யா ராணுவம்

kenya_bombing_001கென்யா பல்கலைக்கழகம் தாக்குதலுக்கு காரணமான அல்-ஷபாப் தீவிரவாதகளின் இருப்பிடங்கள் மீது அந்நாட்டு ராணுவம் குண்டு வீச்சை நடத்தி வருகிறது.

கடந்த வாரம் கரிசா பல்கலைகழகத்தில் அல்-ஷபாப் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 5 இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி மாணவர்கள் உள்பட 148 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் ஒரு பிரிவான அல்-ஷபாப் தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர்.

இந்த கொடூர தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த கென்யா ஜனாதிபதி Uhuru Kenyatta, அல்-ஷபாப் தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சூளுரைத்தார்.

இந்நிலையில், சற்று முன் வெளியான செய்தியில், சோமாலியாவிலிருந்து கென்யாவிற்கு நுழையும் பகுதியான Gedo-வில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது கென்யா ராணுவம் குண்டு வீசி தாக்குதல்களை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போதைய தகவல்களின் படி, Gedo பகுதியில் உள்ள இரண்டு தீவிரவாத முகாம்கள் மீது கென்யா போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

ஆனால் இந்த தாக்குதலில், தீவிரவாதிகள் கொல்லப்பட்டனரா என எந்த தகவலும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையே இத்தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அல்-ஷபாப் அமைப்பின் தலைவர் முகமது முகமட்(Mohamed Mohamud) என்பவரின் தலைக்கு கென்யா அரசு ரூ.1 கோடியே 35 லட்சம் பரிசு தொகை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com