ஞாயிறு மலரில் மேற்காணும் பதிவை பார்த்தேன். துணிவாக படைத்தவருக்கு பாராட்டுக்கள். அதன் தேடலில் இன்னும் சில
அவசிய தேவைகளை ஊடுருவ நான் ஆசைப்படுகிறேன்.
2008 பிறகு 2013 பொதுத் தேர்தல்களின் போதும் சிலாங்கூர் இந்தியர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் பாகாதானுக்கு குறிப்பா பி கே ஆர் வழி சமூகத்துக்கு ஏதோ ஒரு புதிய பொருளாதார் வெளிச்சம் கிடைக்கப்போவுது என்ற நம்பிக்கையில் ஒரு மாற்று ஆட்ச்சிக்குழு உறுப்பினரையும் போராடியே பெற்றோம்.
பி கே ஆரின் மாண்பு மிகு சேவியரையும் இணைத்து இருவர் வர வேண்டும் என்பதுதான் அன்வாரிடம் நாங்கள் கொடுத்த எங்களின் கடசி பரிந்துரை.முடிவு ஒன்றாக மாறியது கட்சி ரீதியில் பி கே ஆர் இந்தியர்களுக்கு கட்டுரை சொன்னது போல ஏமாற்றம்தான்.
இதற்கு முன் தேசிய முன்னணி கொடுத்த அதே ஓர் இந்தியர் வரம்தான் பாகாதான் ஆட்சியிலும் கிடைத்தது. மாண்புமிகு சேவியரின் சாதனை என்பது பாகாதானின் தேர்தல் கொள்கை அறிக்கையாக இருந்தாலும் சமூதாயத்தின் மீது சேவியரின் வேகத்தை குறைத்து மதிப்பிட முடியாது. குறிப்பாக தமிழ்ப்பள்ளிகள் கோயில்கள் அவதாரம் விவேகமிக்க காலம் எனலாம்.
பொதுவாக சிலாங்கூர் இந்தியர்களுக்கு தோட்டததுறையும், ஏழ்மை பரிவுமிக்க சமூதாய சிக்கல் மாட்டுமே அல்ல. அதையும் தாண்டி 2020 வளர்ச்சிக்கால வெடியளுக்கு பொருளாதார வின்மீன்களை பிடிக்க எந்த முயற்சியும் இல்லை என்பதுதான் நமது சோகம்.
சிலாங்கூர் பி கே ஆரில் நமக்கு இன்னொரு இந்தியர் சட்ட மன்ற உறுப்பினர் இருந்தும் பாகாதானின் முடிவு ஏமாற்றம் என்பதை இந்த நீதிக் கட்சி ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
இந்தியர்களின் ஆதரவு பெற்ற பி கே ஆர்,டி ஏ பி , மற்றும் பாஸ் இந்தியர் மன்றம் இன்னும் இந்தியர் சார்பு கோவில் , பெ .ஆ சங்கங்கள், எஞ்சிவோக்கள் இந்தியர்கள் தேர்தல் ஆதரவை பாகாதான் குறிப்பா பி கே ஆர் நன்றியுடன் நினைத்து கடமை ஆற்ற வேண்டும்.
நடப்பு எக்சொவுக்கு அதிக அரசியல் பழு இருந்தால் அவர் இந்தியர்களுக்கான சிறப்பு அதிகாரிக்கு மாநில முதல்வரிடமும் ஆட்சிக்குழுவின் ஆதரவுக்கு கட்சியின் ஆலோசனையை கேட்டு முன் வைக்க வேண்டும்.
மலாய்ககாரர்களுக்கும் சீனர்களுக்கும் அரசியல் நடவுகளை தெரிந்து மாநிலத்தில் பயன் அடையும் அளவுக்கு இந்தியர்களும் தமிழர்களுக்கும் இந்தியர் சார்பு எஸ்கொவில் அந்த வாய்ப்பு இல்லை. மாண்பு மிகு கணபதி ராவு அலுவலகத்தில் கூடும் மாக்களின் எண்ணிக்கை மற்ற எஸ்கொவில் இல்லை என்றே எனது ஆய்வு சொல்ல்கிறது. ஒரு நாள் காலை 9 மணிக்கு வந்த 60 வயது தாய் மாலை 3 மணியாகியும் கவனிக்க ஆள் இல்லை. ஆனால் அதிகாரிகள் நடப்பதுவும் சந்திப்பிலும் இருக்கும் வேகம் சிக்கலை களைவதில் இல்லை என்ற பல புகார்கள் உள்ளன.
மனித வளம் நிர்வாக் ஆளுமை எவ்வளவுதான் இருந்தாலும் இந்தியர்களின் தேடல் ,தேவை , தீர்வு , பொருளாதார பயன்கள் பல மடங்கு பாக்கியாக இன்னும் ஆதே தேசிய முன்னணியின் சாக்கு போக்குதான் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் சிலாங்கூரில் மற்ற இனத்தவர்கள் வசதிக்கும் வாய்ப்புக்கும் பொருளாதார வளப்பத்துக்கும் வேலை வாய்ப்புக்கும் பஞ்சமில்லை. எல்லாம் நிம்மதியாக உள்ளார்கள். நமக்கும் நமது அரசியல் பிரதிநிதிகளுக்கும் இதில் தெளிவு இருந்தும் பரிந்துரைகள் இல்லாத கதவை தட்டி கேற்க வக்கற்ற அரசியல் ஆளுமை எதற்கு என்றுதான் நமக்கு எமாற்றமாக உள்ளது.
சிலாங்கூரில் பாகாதான் இந்தியர்களை தனியாக கவனிக்க மாநில முதல்வர் அஸ்மின் நேரடி அதிகாரத்தில் தனி சிறப்பு அதிகாரி காலத்தின் காட்டாயம. அதுபோல GLC . மற்றும் இதர சிலாகூர் மாநில துணை நிறுவனங்களில் இந்தியர் பொது உறவு அதிகாரிகள் அமர்த்துவதும் மிக அவசியமான தேவை. இப்படி பகுதிகள் வாரி மக்களின் வீட்டு மனை சிக்கல், வணிக மேம்பாட்டு சிக்கல், பொருளாதார திட்டமைப்பு சிக்கல், சமூக மேம்பாடு ,கலை கலாசார கல்வி போன்ற அதி முக்கிய சீர்கேடுகளை களைய முடியும். இதற்கு இதர சட்டமன்ற நாடாளுமன்ற இந்தியர் பிரதிநிதிகள் சமசீர் சிந்தனையில் பரிந்துரைகளை வழங்க ஆதரிக்க முன் வர வேண்டும்.
மாநில தண்ணீர் சிக்கலை பேசும் மாண்பு மிகு சார்லஸ் அவர்கள் சிலாங்கூர் மாநிலத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் பல விவரம் தெரிந்த நாடாளுமன்ற உறுப்பினர் அது போல மணிவண்ணனும் சிவ ராசாவும் சளைத்தவர்கள் அல்ல. ஆனால் ஏன் நமது சமூக விவகாரத்தில் ஆமை போல பின்னோக்கி புறம் நழுவி போகிறாகள் என்று தெரிய சமுதாயம் ஆசைப்படுகிறது. வாசல் கதவு அடைப்பு என்றால் ஜன்னல் வழி பூர இவர்களுக்கு பதவி உரிமை தந்துள்ளோம்.
அரசியலில் அடுத்தப்பதவி அடக்கி வாசிக்கத்தான் என்றல் சமுதாய வளம் வீண்தான். இந்த துரோகம் அடுத்த தேர்தலில் கொக்கரிக்கும் கைகளை உயர்த்த ஆளில்லாத அவதி வேண்டாம்.
அடுத்த தேர்தல் வர இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளது. மாநில முதல்வர் அஸ்மின் அவர்கள் திறமை ஆளுமை தூர நோக்குங்கால் பார்வை வெறும் அரசியல் சாங்கியம் சாணக்கியம் என்று இல்லாமல் சமூக ஓலங்களை மனசாட்சியுடன் உரசி பார்க்க வேண்டும். 2020 அதற்குப்பினும் இந்தியர்களுக்கு திட்டமிட வழி காட்ட இதுதான் தருணம். ஒரு வேளை பதவிக்கு நிற்கும் ஊமைகள் மௌனம் முதல்வருக்கு வசதி என்றால் மக்கள் நிறுவை நிச்சயம் நகரும்.
நாட்டின் IS , HUDUD , syariah , தண்ணிர், நிலம் , சொத்து சிக்கல்கள் என்பது நடுவண் சிக்கல். ஆனால் மாநில இந்தியர்கள் தீர்வு எனபது மாநில முதல்வர் கையில் உள்ள பொன் முட்டை அதை வெண் முட்டையாக்குவதும் அல்லது காக்க வைத்து அழுகி கெடுத்து தாய் கோழிபோல தள்ளி விடுவதும் உங்கள் பொறுப்பு, ஆனால் மாநில மக்கள புது முட்டை இடுவதை யாராலும் தடுக்க முடியாது. முடிக்கும் முன் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் பிகே ஆரை ஒப்படைத்து விட்டோம் அதை சரியாக் செய்வில்லை என்றால் இதை தாண்டி வெற்றி பெற முடியாது. புதிய சாதனைகளே ஒரு புதிவர் மற்றவர்களுக்கு அளிக்கும் சிறந்த அன்பளிப்பாகும்.
வெற்றியாளர்கள் முடிவுகளை விரைவில் எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை மிக மெதுவாகவே மாற்றுகிறார்கள். தோல்வியுறுபவர்களோ, முடிவுகளை மிக மெதுவாக எடுக்கிறார்கள்; அப்படி எடுத்தமுடிவுகளை அடிக்கடியும், மிக விரைவாகவும் மாற்றுகிறார்கள்.
சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.
வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே. என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய். செய்வதை விரும்பிச் செய். செய்வதை நம்பிக்கையோடு செய் பலரும், தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள்.
வெற்றியாளர்களோ எழுந்து, தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள்; அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில், அவர்களே உருவாக்குகிறார்கள்.எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது; அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை.
எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே சமுதாயத்துக்கும் தன வாழ்க்கையிலும் வெற்றி பெறுவான்.
-ம .அ.பொன் ரங்கன்
பி கே ஆர் அம்பாங் சிலாங்கூர்
பொன் ரங்கன் அவர்களே ! உங்களின் எழுத்துகள் , நீங்கள் நடப்பு அரசியலை நன்கு அறிந்து வைத்துள்ளீர்கள் என்று தெரிகிறது . இதற்கு முன்பு ” மலேசிய தமிழர் காங்கிரசுக்கு காலம் கனிந்து விட்டது ” என்று எழுதியவரும் நீங்கள் தானே ? நரி வாயிலிருந்து முதலை வாயில் அகப்பட்ட கதை தான் நம் சமுதாயத்தின் இன்றைய நிலைமை !! இன்னும் சொல்லபோனால் ” வந்தவனும் சரியில்லை வாயச்சவனும் சரியில்லை என்ற கதை தான் “. ஆளும் கட்சிக்கும் சரி எதிர் கட்சிக்கும் சரி , தேர்தல் காலங்களில் மட்டும் தேவை படும் ஒரு இனமாக நம்முடைய தலை எழுத்து செயர்கையாக மாற்றப்பட்டுள்ளது . மற்றவர்களை குறை கூருவது விவேகமல்ல என்று சொல்வதிலும் நியாயமில்லை !
தாப்பா பாலாஜி அவர்களுக்கு நன்றி. உண்மைதான் ! அரசியல் என்ற பொதுப்பயிர் ஒன்றாக இருந்தாலும் அங்கே உழவன் , உரம் , தண்ணீர் ,மழை என்ற வரை அறைகள் உண்டு . நிலத்தை சரியாக பயன்படுத்தாவிட்டால் காடுதான் மிஞ்சும். அதுபோல காலத்துக்கு ஏற்ப அரசியல் நிபுணர்கள் வேண்டும். அது முதல்வன் முதல் அமைச்சர்கள் மட்டும் அல்லது பிரதிநிதுகளுக்கும் இந்த சிந்தனை அறிவு வேண்டும். அப்போதுதான் பதவிக்கு அழகு. மக்கள் தந்த “ஜெயத்தோம்” என்ற திமிரில் தூங்கக்கூடாது. இருக்கிற குப்பை கோப்புகளை பார்க்க ஆளு இருக்கணும் . மக்கள் தேவை அறிந்து பாரையை . நகர்த்த புது சிந்தனா யுக்க்திகள் வேண்டும். அரசு கொள்கை அதை மீற முடியாது என்றால் எதற்கு பரிணாம வளர்ச்சி? எதற்கு தேர்தல் ஆர்பாட்டம் எல்லாம். இனம் வீழ்த்து கிடக்கு. பலவீனர்கள் ஓய்வெடுக்க வேண்டிய அவசர காலம்.
இப்படி கையாலாகாத மக்கள் கூட்டணி கட்சிக்கு எதற்கு இந்தியர்கள் ஆதரவு தர வேண்டும்? மீண்டும் பொதுத் தேர்தல் வரும் அப்பொழுதும் இந்தியர்கள் தலையில் மிளகாய் அரைப்போம் என்று மக்கள் கூட்டணி நம்பி இருந்தால் அவர்கள் கண்ணில் மிளகாய் தூளை தூவி எரிய விடுவார்கள் இந்தியர்கள். PKR மற்றும் DAP கட்சிகளில் இருக்கும் இந்திய சட்டமன்ற, நாடாளுமன்ற பிரதிநிதிகளின் சேவை நமக்கு பயன் அளிக்கவில்லை என்றால் அவர்களுக்கு ஏன் நமது வாக்கைப் போட வேண்டும். இனி அவர்களுக்கு வாய்க்கரிசிதான் போட வேண்டும். போடுவோம் அடுத்த பொது தேர்தலில்.
பொன். ரங்கன் அவர்களே… நீங்கள் எதையோ சொல்ல வருகிறீர்கள் என்பது புரிகிறது. ஆனால் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. எதற்காக உவமைப் பேச்சு? என்ன சொல்ல விரும்புகிறீர்கள் எனபதை தெளிவாக நேரிடையாக சொல்லிவிடலாமே? இங்கே நாம் தானே (அவர்களாலும், இவர்களாலும் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படுகிற நாம் தானே) கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டிருக்கிறோம். தெளிவாகச் சொல்லிவிட்டால் அடுத்து நாம் என்ன செய்யலாம் என்பது பற்றியும் விவாதிக்கலாமே…
திருமூர்த்தி ! முன்னாள் மந்திரி புசாரை ( கலிட் ) ஆதரவு கொடுத்து மாட்டிக்கொண்டார் பொன் ரங்கன் ! என்னமா சப்போட் பண்ணார் இந்த பொன் ரங்கன் !
இதைதான் நானும் சொன்னேன்..மூன்றாவது அணி வரணும், ..நம் இந்தியர்களுக்கு அதில் விடியல் கிடைக்குமா ? B N மற்றும் PR இது இரண்டுக்கும் நாம் அடுத்த தேர்தலில் ஆப்பு வைக்க வேண்டும்..
நல்ல காலம் பிறக்குது! நல்ல காலம் பிறக்குது! இந்த மண்ணுக்கு நல்ல காலம் பிறக்குது! ஜக்கம்மா வாக்கு தவறாது! நம்ம மக்களுக்கு அநீதி செய்யறவங்க யாரா இருந்தாலும் ஜக்கம்மா கூடிய சீக்கிரத்திலே ஓட ஓட விரட்டிருவா! நல்ல காலம் பிறக்குது! நல்ல காலம் பிறக்குது!
நான் ஒன்றை எழுதி அச்மீனும் கணபதியும் திருந்தனும் என்று எழுதினால் ..இவர்கள் என் குடைச்சல் புரியாமல்…. குத்துதே குடையுதே என்றால் போய் சொரிந்துக்கொள்ளட்டுமே!
உங்களுக்கு ஏதாவது மிஞ்சினால் நான் தமிழன் சந்தோசப்படுவேன். அஸ்மின் த்ன் புதிய தலைமைத்துவத்தில் இந்த சமூதாயத்துக்கு என்ன கிழிக்கப்போறார் என்று தெளிவா கேக்கிறேன். MBD கம்பனியில் 30 புதிய வேளை வாய்ப்பு அஸ்மின் கொடுத்தார் ..ஒரு தமிழனையும் காணோம்.
என்ன கேள்வி இது …என்ன விளக்கம் வேண்டும்? தூங்கும் நரி கோழி பிடிக்காது என்பார்கள். நான் முட்டையாச்சும் போடுங்கப்பா என்று கேக்கிறேன். தமிழா தமிழ் விளங்க இவ்வளோ… சுத்தமா?
பழைய MB புதிய MB எந்த பூச்சாண்டிக்கும் பூஜை போட்டு பூ பூசி குச்சி ஆட்டம் போடற பழக்கம் நமக்கு ஆகாது …பொன் தமிழேன் ” Paa ”
உங்க இரண்டு பேருக்கும் நல்ல ஆற்றல் இருக்கு. சமூதாயத்துக்கு பயன் படுத்துங்கள். குப்பையை கிளறி குண்டு மணி தேடுங்கள். கோழி கிளறல் அங்கே புளுக்கைதான் கிடைக்கும் / நேரத்தில்
நல்லதை எழுதுங்கள்.
என் சமயத்தை கேவல படுதியவனுக்கு .எந்த கட்சி தண்டனை வாங்கி தருகிறதோ ..அவனுக்கே என் ஓட்டு ..பத்திரிகையில் எத்தனை அறிக்கைகள் …..போலீசில் எத்தனை புகார்,,…அவங்களை ஒன்னும் புடுங்க முடியவில்லையே ……அப்போ நம் மதிப்பு அவ்வளுவுதான் …நண்பர் சொன்னதுபோல் எவனையும் நம்ப முடியவில்லை
நம் சமுதாயத்திற்கு மதிப்பில்லை என்பதை நம்மில் ஒவ்வொருவருவரும் உணர வேண்டும் .அதிலிருந்து மீள நம் ஒற்றுமையும் ,கல்வியும் ,பொருளாதார பலமும் தான் தலையாயது .அரசியலால் சண்டைதான் மிச்சம் .
வணக்கம். நம் சமுதாயத்திற்கு இன்னொரு ஆட்சிகுழு உறுப்பினர் இருந்தாலும் நம் சமுதாய பிரச்னை தீராது. காரணம் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் வந்துவிட்டது. ஆட்சிகுழு உறுப்பினர் புதியவர், நகராண்மைகழக உறுப்பினர்கள் புதியவர்கள் ஆனால் அடிமட்டத்தில் குறிப்பாக கிராமத்தலைவர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் மத்தியில் இன்னமும் திறமையானவர்கள் வரவில்லை ,வர வாய்ப்பு தரவும் இல்லை. நகராண்மை கழகத்தில் அரசுசார இயக்கத்தினருக்கு வாய்ப்பு தந்தார்கள் ஆனால் முக்கியமான கிராமத்தலைவர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் பதவியில் ஆரசு சார இயக்கத்திற்கு வாய்ப்பு தர மறுக்கிறார்கள். சரிவர மலாய் தெரியாதவர்கள் மற்றும் கொஞ்சமும் பொதுநலசேவை அனுபவம் இல்லாதவர்களுக்கு பதவி கொடுத்து சமுதாயத்தை மேலும் சிக்கலுக்கு ஆளாக்கிஇருக்கிறார்கள். இன்னமும் அரிசி, சாப்பாடு. துண்டு, மீஹோன் செய்யும் சாதனம் மற்று மலிவான மின்சார பொருட்கள் கொடுத்து மக்களை முட்டாள்கள் ஆக்குகிறார்கள். கங்காணி ஆச்சிமுறையை ஊக்குவிக்கிறார்கள். கேள்வி கேட்டால் கெட்டவர்கள் மற்றும் குழப்பவாதிகள் என்று முத்திரை குத்துகிறார்கள்.
தங்களின் கூற்று உண்மையே …..நாம் மாற வேண்டும் …நம் பிள்ளைகளுக்கு நாட்டின் சூழ்நிலை .,பள்ளி , வேலைவாய்ப்பு ,,வியாபாரம் .இன்னும் பல விஷயங்கள் .,,,,,,,,பற்றி பேச வேண்டும் …நமது சமுதாயம் வாழ்க்கை பயணத்தை புதிய வழியில் தொடர வேண்டும் .இல்லையேல் எதிர் காலம் ……………………?
செலாங்கொரில் இந்தியனுக்கு என்னென்ன வேண்டும் என்று முறையே பட்டியலிட்டு கொடுங்கள். நியாயமான கோரிக்கைக்கு நல்ல பதில் அல்லது முடிவு கிடைக்கிறதா என்று பார்ப்போம். வாய்ப்பு…வேண்டும் …வாய்ப்பு வேண்டும்…என்று கூவினால் அது செவிடன் காதில் ஊதிய சங்குபோலத்தான் கருதுவார்கள்… தைரியமாக உரிமையுடன் கோருவோம்…..!!!!
பொன் ரங்கன் அவர்களே மாண்புமிகு என்ற சொல் தேவையில்லை.சிவராசாவும் மணி வண்ணனும் அன்வாரின் லாயர்கள் அவர்களிடம் என்ன எதி ர்பார்க்கிriRகள் ? பி.கே ஆறில் ஆட்சிக்குழு இல்லாவிட்டால் அது இந்தியர்களுக்கு மட்டுமல்ல ஓட்டோமொட்ட கே ADIடிலானுக்கு நட்டம்
பி ஜெயில் அம்னோ இருநட பொது 100 குத்தகைகள் ஒரே சாராருக்கு அனுப்பப்பட்டது . 150 குத்தகைகள் நம்மவர்களுக்கு கொடுக்கப்பட்டதாக தகவல். எத்தனை ஆட்சிக் குழு உறுப்பினர் வந்து என்ன பயன்
நம்மவர்கள் அல்ல அவர்களுக்கு
சிலாங்கூர் இந்தியர்களுக்கு ஆட்சிக்குழு பதவி எதுவுமே கொடுக்க கூடாது .எங்க போனாலும் பதவிக்கு அடிசிகிராங்க ,,எல்லாம் அவன் அவன் சுய நலத்தைத்தான் கருதுறாங்க
சிறுபான்மையான நம் இனத்திற்கு பெரும்பிளவை ஏற்படுத்திய பல கட்சிகளும் ஒரு முக்கிய காரணமும் கூட,இந்தியர்களே இந்தியர்களுகிடையே கொன்று குவித்து வருகின்றனர்,பக்தியையும் நல்லொழுக்கமும் உருவாக்கித் தரகூடிய கோவில்களில் தனி ராஜாங்கம், தமிழ்பள்ளிகளில் PIBG பதவி பிரச்சனை, நம் குழந்தைகளை தமிழ் பள்ளிகளுக்கு அனுப்ப மறுப்பது,ஒரே நிறுவனத்தில் வேலைப்பார்ப்பவர்களை போட்டுக்கொடுப்பது,உதவியின் பெயரில்
பணம் இரவல்வாங்கி ஏமாற்றுவது,பெற்றோர்களை,குழந்தைகளை,மனைவி,உடன்பிறந்தவர்களையும் கைவிடுகின்ற பொறுப்பற்ற பலர், மதமாற்றம் போன்ற மற்றும் பல தவறுகளை நம்மவர்களுக்கிடையே உணராமல் இருக்கின்றனர். இனம்,மொழி,மதம், இவைகளில் பற்று இல்லாதவரை நமக்கு வெற்றி இல்லை,50 வருடத்திற்கு மேலான umno ஆட்சியில் கிடைக்காத சில உரிமைகளும் சலுகைகளும் 5வருட பக்காதான் மாநில ஆட்சியில் கிடைத்ததற்கு கெடா லங்காவி இந்தியர்கள் நன்றிக்கடன் பட்டுள்ளனர்.சுயநலம் பாராமல் ஒன்றுபட்டால் வெற்றி நிச்சயம்.யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.
தமிழர்கள் உருப்படாத கட்சிகளை நம்பி ஓட்டுபோட்டு , ஏமாந்துகொண்டு இருக்கிறோம் . சிங்கையைபோல் இளைய பட்டதாரிகள் தேர்வுசெய்யப்படுவதில்லை .பாமரர்களையும் மதபண்டிதர்களையும் கட்சிக்காக தேர்வுசெய்கிறோம் .நமக்காக எவனும் எதையும் கேட்பதில்லை . இனிகொஞ்சம் சிந்திப்போம் . யோக்கியமான
சுயேச்சை தமிழர்களை தேர்வுசெய்வோம்.
நல்லவன் நன்றாக சிந்திக்கிறார். வாழ்த்துகள். தம்பி ! கொஞ்சம் கை கொடுங்கள்,அயோக்கிய பெருச்சாளிகளை அடுத்த 2018 தேர்தலில் நக்க வைப்போம்.
விடு பட்டுப் போன எஸ்டேட் தொழிலாளர்களுக்கு எதைச் செய்தார்கள் எனக் கேளுங்கள் அதை விட்டு விட்டு பதவியைப் பற்றி வினா எழுப்புவது அர்த்தமில்லை