டாக்டர் மகாதிர் முகம்மட் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பற்றிக் கடுமையாகக் குறைகூறி வருவதால் அம்னோவும் அதன் அடிநிலைத் தலைவர்களும் கலக்கமடைந்துள்ளனர்.
அவர்களில் ஒருவரான செராஸ் அம்னோ தொகுதித் தலைவர் சைட் அலி அல்ஹாப்ஷி, இந்நெருக்கடிக்குத் துணைப் பிரதமரும் உதவித் தலைவர்களும் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தலைவர்கள் மகாதிருடனும் நஜிப்புடனும் தனித்தனிக் கூட்டங்களை நடத்த வேண்டும்.
“மூத்த தலைவர்கள் இருவருக்குமிடையில் அமைதியை உண்டுபண்ண வழி காண வேண்டும்”, என்றாரவர்.
அதென்ன மாமக்தீர் பேசினால் மட்டும் அவருடன் துணைத் தலைவர்கள் தனித்தனிக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று ஆலோசனை சொல்ல வேண்டியது. எல்லாமே மூடு மந்திரமாக இருக்க வேண்டும் என்பதாலோ?. நல்ல நாடு! நல்ல அரசாங்கம்! நல்ல அரசியல் தலைவர்கள்!.
மகாதிருடன் பேசி நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டிய அவசியம் இல்லை ,,மாஹதிர் கேள்விக்கு நஜிப் பதிலளிக்க வேண்டும் ,முதல் கேள்வி ஆள்தான் துயாவை கொன்னது யாரு BRO என்று
அம்மாவின் ஆட்டம் தாத்தாவை ஆடவைத்து விட்டது. அதனால் தாத்தா பிதற்றத் தொடங்கி விட்டார். இந்த தாத்தாவின் பிதற்றலுக்கு கணம் அதிகம். பார்ப்போம்.
நஜிப் பதவிவிலகும் வரை விடமாட்டார்.படாவியைபோல் விலகமாட்டார்.தன்னை தற்காத்துக்கொள்ள பின்னனிய்ல் அம்னோதலைகலை மகாதிருக்கெதிராக தூண்டிவிட்டு
போலிஸ்புகார் செய்யவைப்பார்.ஜஜிபி ஊதாங்குழலுக்கு தருமசங்கடம் எந்தப்பக்கம் ஊதுவாரோ!பொருத்திருப்போம்.ஜிஎஸ்டி பதவிவிலகுமாமா!
இன்று பல சரக்கு வாங்கிய என்மனைவி அனைத்து பொருல்கலுக்கும் ஜிஎஸ்டி கொடுத்து நஜிப்புக்கு விட்ட சாபம் பலிக்குமா?