சிருலின் தாயார் மகாதிரை சந்தித்தார்

 

Sirul'smumdrmபாஸ் பொக்கோ செனா நாடாளுமன்ற உறுப்பினர் மாபுஸ் ஒமார் அல்தான்துயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு தற்போது ஆஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் போலீஸ் கோனாண்டோ சிருல் அஸார் ஒமாரின் தாயார் பியா சாமாட்டை இன்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட்டை சந்திக்க அழைத்துச் சென்றார்.

அச்சந்திப்பு புத்ராஜெயா, யாயாசான் பெர்டானாவில் நடைபெற்றது. ஆனால் அது எப்போது நடைபெற்றது என்பது நிச்சயமாகத் தெரியவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப் போவதாக மாபுஸ் மலேசியாகினியிடம் கூறியிருந்தார்.

அல்தான்துயாவை கொலை செய்ய உத்தரவிட்டது யார் என்ற கேள்வியை மகாதிர் சமீபத்தில் எழுப்பியிருந்தார்.

இவ்விவகாரத்தில் நஜிப் தொடர்ந்து மௌனம் சாதிப்பதால், அடுத்த 14 ஆவது பொதுத் தேர்தலில் அம்னோவும் பாரிசானும் தோல்வி அடையக்கூடும் என்று தாம் அஞ்சுவதாக மகாதிர் கூறினார்.

இன்று பின்னேரத்தில், நாடாளுமன்றத்தில் மலேசியாகினி மாபுஸ் ஒமாரிடம் இச்சந்திப்பு நடந்தது பற்றி கேட்டதற்கு அவர் அது குறித்து எதுவும் கூற மறுத்து விட்டார். ஆனால், நாளை காலையில் நாடாளுமன்றத்தில் ஒரு செய்தியாளர் கூட்டத்தை நடத்தப் போவதாக அவர் மேலும் கூறினார்.