பொக்கோக் செனா எம்பி மாபுஸ் ஒமார், ஆஸ்திரேலியாவுக்குத் தப்பியோடிய போலீஸ் அதிரடிப் படை வீரர் சிருல் அஸ்ஹார் உமரைச் சந்திப்பதற்கு ஒரு போலீஸ் குழுவை அனுப்புவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யத் தயாராக இருக்கிறார்.
“அதிகாரிகளை அனுப்பி வைக்க போலீசிடம் பணமில்லை என்றால் ஒரு புரவலரைப் பிடித்து போலீசும் போலீஸ் படைத் தலைவரும் அங்கு செல்வதற்கு ஏற்பாடு செய்கிறேன்”, என்றவர் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று கூறினார்.
இதற்குமுன் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார், சிருலை போலீசார் சிட்னியில் சந்தித்து விட்டார்கள் என்றும் அதனால் மீண்டும் சந்திக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியிருந்தார்.
ஆனால், சிருல் மலேஎசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் அதை மறுத்தார்.