ரஷ்யாவை சேர்ந்த நபர் ஒருவருக்கு உலகின் முதல் தலைமாற்று அறுவை சிகிச்சை நடக்கவிருப்பதை கண்டித்து மருத்துவ நிபுணர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா தலைநகர் மோஸ்கோவில்(Moscow) வசிக்கும் ஸ்பிரிடோனோவ்(Spiridonov Age-30) என்ற நபர் சிறு வயதில் மரபணு குறைபாடு காரணமாக, தசைகள் வளர்ச்சியற்று வேர்டிங் ஹாப்மேன்(Werdnig-Hoffman) எனும் நோயால் பாதிக்கப்பட்டார்.
இதனால் அவரது தலை பகுதி மட்டுமே ஆரோக்கியமாக உள்ளது. மற்ற உடல் பாகங்கள் அனைத்தும் வலுவிழந்து சுருங்கிவிட்டது.
இதன் காரணமாக நாளுக்கு நாள் உடல்நிலை மோசமாகி வருவதால், கடைசி முயற்சியாக, மூளை சாவடைந்து ஆரோக்கியமாக உள்ள உடல் ஒன்றில் தலையை பொறுத்தும் தலை மாற்று அறுவை சிகிச்சையை அடுத்தாண்டு மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.
இதற்காக இத்தாலியை சேர்ந்த, அறுவை சிகிச்சை நிபுணரான செர்ஜியோ கனாவேரோ(Sergio Canavero) என்பவரை தொடர்பு கொண்டு ஸ்பிரிடோனோவ் கேட்டுள்ளார். அவரும் இந்த சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செர்ஜியோ கூறுகையில், உங்களுக்கு பயமாக இல்லையா என்று கேட்கிறார்கள், பயமாக இருக்கிறது அதைவிட சுவாரசியமாகவும் இருக்கிறது.
இதில் உள்ள ஆபத்துகளை புரிந்து கொண்டே அறுவை சிகிச்சைக்கு ஒத்துக்கொண்டுள்ளேன் என்றும் இந்த முயற்சிக்கு என்னுடைய குடும்பம் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர் எனவும் கூறியுள்ளார்.
ஆனால் உலகின் பல முன்னணி மருத்துவ நிபுணர்கள், இந்த சிகிச்சை மரணத்தை விட மோசமானது என கூறி, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-http://world.lankasri.com