ஐ.எஸ் அமைப்பிற்கு முடிவு நெருங்குகிறதா? யுத்தத்தில் களமிறங்கிய சுவீடன்

is_sweden_001ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட தற்போது சுவீடன் நாடும் முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா முதல் கமாண்டராக இருந்து தற்போது ஐ.எஸ் தீவிரவாதத்திற்கு எதிரான போரை வழி நடத்தி செல்கிறார்.

அமெரிக்க ராணுவத்தை தலைமையாக கொண்டு சில ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் ராணுவங்கள், சிரியா, ஈராக், துருக்கி, லிபியா மற்றும் எகிப்தில் உள்ள தீவிரவாதிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

சமீபத்தில் கனடா நாடு ஐ.எஸ் அமைப்பிற்கு எதிராக கூட்டணி நாடுகளுடன் இணைந்ததுடன் தனது முதல் தாக்குதலையும் தொடங்கியுள்ளது.

இதன் தொடர் வரிசையாக, ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவீடனும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் இணைந்துள்ளது.

இதுகுறித்து சுவீடன் நாட்டு வெளியுறவு துறை அமைச்சரான Margot Wallstroem நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது, சுவீடன் ராணுவத்தை சேர்ந்த 120 ராணுவ வீரர்கள் ஈராக்கிற்கு அனுப்பபட்டு அங்குள்ள ஈராக் மற்றும் குர்திஷ் வீரர்களுக்கு ராணுவ பயிற்சிகள் வழங்குவார்கள்.

இதன் முதல் கட்டமாக 50 ராணுவ தளவாடங்கள் எதிர்வரும் யூன் மாதத்தில் அனுப்பபடும் என்றும் இது எதிர்காலத்தில் 120 ஆக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஈராக் நாட்டிடமிருந்த தங்களுக்கு வந்துள்ள வேண்டுகோளை நிறைவு செய்யும் வகையில் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும், எதிர்காலத்தில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை ஒடுக்குவதற்கு தேவையான அத்தனை உதவிகளையும் ஈராக் அரசிற்கு வழங்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச அளவில் ஐ.எஸ் அமைப்பிற்கு எதிராக போரிட்ட வரும் நாடுகளின் பட்டியல்:

United States

Australia

Belgium

Canada

Denmark

France

Germany

Italy

Jordan

Morocco

Netherlands

New Zealand

Norway

Portugal

Spain

Turkey

U.A.E

United Kingdom

Sweden(தற்போது புதிதாக சேர்ந்துள்ள நாடு)

உள்நாட்டில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்படும் அணிகள்:

Iraq

Iraqi Kurdistan

Peshmerga

Dwekh Nawsha

Nineveh Plain Protection Units

சர்வதேச நாட்டு ராணுவங்களுக்கு எதிராக போரிடி திண்டாடி வரும் நிலையில், தற்போது ஐ.எஸ் தீவிரவாத வாகனங்கள் டீசல் மற்றும் பெட்ரோல் எண்ணெய் பற்றாக்குறையால் தவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

-http://world.lankasri.com