5 வருடங்களில் 209 நபர்களை சுட்ட பொலிசார்: அம்பலமான அதிர்ச்சி தகவல்

america_shooting_001கடந்த 5 வருடங்களில் தெற்கு கரோலினாவை சேர்ந்த பொலிசார் சுமார் 209 நபர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளதாக தற்போது அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவை(South Carolina) சேர்ந்த பொலிசார் ஒருவர் கருப்பின நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றதை தொடர்ந்து அமெரிக்க பொலிசார் மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.

The State பத்திரிகை வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தில், கடந்த 5 ஆண்டுகளில் தெற்கு கரோலினாவை சேர்ந்த பொலிசார் சுமார் 209 நபர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்களில் 79 பேர், அதாவது 37.8 சதவிகிதத்தினர் மரணமடைந்தனர். இதற்காக மூன்று பொலிசார் தவிர மற்று பொலிசார் மீது வழக்கு தொடரப்படவில்லை என அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

209 நபர்கள் சுடப்பட்டதில் 3 பொலிசார் மீது தான் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்றும் ஆனால் இதுவரை ஒரு பொலிசார் மீதும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் ஸ்கோட் என்ற கருப்பின நபரை சுட்ட மைக்கல் ஸ்லேகர்(Michael Slager Age-33) இந்த பட்டியலில் சேர்க்கவில்லை.

ஸ்கோட்டை சுட்டதற்காக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த குற்றம் நிரூபிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பொலிசார் செய்தது கொலை தான் என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு தண்டனை கிடைப்பதுடன் தெற்கு கரோலினா பகுதியிலேயே துப்பாக்கியால் சுட்டு கொன்றதற்காக முதன் முதலாக தண்டிக்கப்பட்டவர் மைக்கேலாக தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com

வெள்ளையின பொலிசின் வெறித்தனம்: கறுப்பினத்தவரை ஓடஓட சுட்டுக் கொன்ற கொடூரம் (வீடியோ இணைப்பு)

கறுப்பினத்தவரை சுட்டுக் கொன்ற விவகாரம்: பகீர் வீடியோவை வெளியிட்ட பொலிஸ்