அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, கியூபா ஜனாதிபதி ராவூல் காஸ்ட்ரோவை சந்தித்து பேசியதன் மூலம் 50 ஆண்டுகால பகை முடிவுக்கு வந்துள்ளது.
அமெரிக்காவை நீண்ட காலமாகவே எதிரி நாடாக கருதி வந்தது லத்தீன் அமெரிக்க நாடான கியூபா.
இந்நிலையில் பனாமாவில் நடந்து வரும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சென்றார், இதில் பங்கேற்பதற்காக கியூபா ஜனாதிபதி ராவூல் காஸ்ட்ரோவும் சென்றிருந்தார்.
இருவரும் கை குலுக்கி கொண்டதுடன், சந்தித்து பேசியுள்ளனர், இதன் மூலம் 50 ஆண்டு கால பகை முடிவுக்கு வந்துள்ளதாக உலக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதற்கு முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான்கெர்ரி, கியூபா வெளியுறவுத்துறை அமைச்சர் பெர்னோ ரோட்ரிஜியசை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து ஒபாமா, ராவூலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதன் பின்னரே, இந்த சந்திப்பு நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-http://world.lankasri.com