மலாய் உரிமைகளுக்குப் போராடும் தரப்பான பெர்காசா, 1மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தைப் புலனாய்வு செய்ய அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்குச் சுயேச்சைத் தரப்புகள் தலைமை தாங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகம்மட்டை ஆணையத்துக்குத் தலைவராக நியமிக்கலாம் எனவும் அது பரிந்துரைத்துள்ளது. அப்துல் ஹமிட் இப்போது பெர்காசா உள்பட மலாய் என்ஜிஓ-கள் அடங்கிய தேசிய ஒற்றுமை முன்னணியின் தலைவராக இருக்கிறார்.
பெர்காசா இன்று காலை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு அனுப்பிய கடிதமொன்றில் இந்த யோசனையை முன்வைத்துள்ளது.
இவனா?. மண்ணுலகமும், விண்ணுலகமும் சேர்ந்தே அழுவும். அதர்மம் வெற்றிபெறும்!. வேற வேலை இல்லாதவன் எல்லாம் இப்படி அறிக்கை விட இதற்குப் பதில் எழுதி நம்ப நேரத்தை வீணாக்காம இருக்க செம்பருத்தி ஆசிரியர் இந்த மாதிரியான செய்திகளை பிரசுரிக்க வேண்டாமே.
நெறி பிராலாத உத்தம சீலர்கள் உண்மையே பேசுபவர்கள் !!!
இவனா, நீதி துறைக்கே ஓர் இழுக்கு. தகுதி இல்லாதவன் தான் தகுதி இல்லாதவனை தேர்ந்தெடுப்பான். ஆச்சிரியம் ஒன்றுமில்லை.
இந்த நாடகம் முடிய இன்னும் எத்தநை வருடமே ?
பெர்காசா பரிந்துரைத்தால் , அது மகாதீரின் வேலையாகத்தான் இருக்கும் !