நீதி விசாரணைகளில் இலங்கை அரசாங்கம் தோல்வி!

un_sl_war_001மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உடனடியாக செயற்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை வலியுறுத்தல்களை விடுத்துள்ளது.

உண்மை, நீதி தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் சிறப்பு நிபுணர் பாப்லோ டி கிரீப் இந்த வலியுறுத்தலை நேற்று விடுத்துள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பிலான விடயங்கள், சட்டவிரோதமாக தடுத்து வைத்தல், சித்திரவதை சிவில் சமூகத்தினர் மற்றும் வடக்கு கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மீது தாக்குதல்கள் மற்றும் கண்காணிப்புகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

குடும்பங்களின் தலைவிகளாக செயற்படும் சுமார் 90ஆயிரம் பெண்களின் நலன்களில் அக்கறை செலுத்தப்பட வேண்டும்.

எனினும் குறித்த விடயங்கள் தொடர்பில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் தமது விசாரணைகளை உரியமுறையில் மேற்கொள்ளவில்லை என்று பாப்லோ டி கிரீப் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே உடனடியாக பொறிமுறைகள் அமைக்கப்பட்டு நீதி கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் விடயத்தில் உண்மை மற்றும் நீதி கிடைக்கப்பெறும் அதேநேரம் நட்டஈடுகளும் வழங்கப்பட வேண்டும்.

ஏற்கனவே மஹிந்த ராஜபக்சவின் அரசாங்க ஆட்சியின்போது காணாமல் போனோருக்கு பலவந்தமாக மரணசான்றிதழ்களை வழங்கும் முனைப்பு முன்னெடுக்கப்பட்டமையையும் கிரீப் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகள் விடயத்தில் நியாயமான விசாரணைகளை சுதந்திரமாக செயற்படுத்த வேண்டும் என்றும் கிரீப் வலியுறுத்தியுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: