தீவிரமடையும் உள்நாட்டு போர்: மரண பயத்தால் விலகும் ஐ.நா தூதர்

un_envoy_001ஏமன் நாட்டில் உள்நாட்டு யுத்தம் தீவிரமடைந்து வருவதால், அந்நாட்டின் ஐ.நா சபை விசேஷ தூதரான ஜமால் பெனோமர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மொரோக்கா நாட்டை சேர்ந்த Jamal Benomar என்பவரை ஐ.நா சபை ஏமன் நாட்டின் விசேஷ தூதராக கடந்த 2012 ம் ஆண்டு அனுப்பி வைத்தது

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் ஏமன் ராணுவத்திற்கும் உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருவதால், நாட்டில் அமைதி திரும்புவது கேள்வி குறியாகியுள்ளது.

கடந்த புதன்கிழமை அன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த Jamal Benomar, தூதர் பதவியை விரைவில் ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்தார்.

இதனைதொடர்ந்து, ஐ.நா சபையிடும் முறையான அனுமதி பெற்று இன்று ஏமன் நாட்டிற்கான விசேஷ தூதர் என்ற பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்தார்.

ஏமன் நாட்டில் உள்நாட்டு யுத்தம் தீவிரமடைந்து வருவதன் விளைவாகவே தூதர் பதவியை ராஜினாமா செய்ததாக செய்திகள் வெளியாகியபோதிலும், ‘மற்றொரு முக்கிய பணியில் கவனம் செலுத்த உள்ளதால்’ தூதர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள ஐ,நா சபை, தூதர் ராஜினாமா செய்தாலும், ஏமன் நாட்டில் அமைதி திரும்ப தீவிர நடவடிக்கைகள் எடுக்கும் என்றும், தூதரக அதிகாரியாக விரைவில் ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமன் நாட்டு உள்நாட்டு யுத்தத்தில் கடந்த சில வாரங்களில் மட்டும் 700 பேர் கொல்லப்பட்டதுடன், சுமார் 2700 பேர் காயமடைந்துள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

-http://world.lankasri.com