ஹிண்ட்ராஃப்-உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு பிரதமர்தான் பதில் சொல்ல வேண்டுமே அல்லாமல், மூன்றாம் தரப்பினர் அல்லர் என்கிறார் ஹிண்ட்ராஃப் இயக்கத்தின் தேசிய ஆலோசகர் நா. கணேசன்.
மலேசியாவில் நலிந்த நிலையில் உள்ள இந்தியர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக ஹிண்ட்ராஃப் இயக்கத்துடன் தேசிய முன்னணி சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பிரதமர் செய்து கொண்டார். ஆனால், அதை பின்பற்ற அவர் தவறி விட்டார். இது சார்பாக ஹிண்ட்ராஃப் தேசிய முன்னணி அரசாங்கத்தின் மீது வழக்கு தொடுக்க ஆலோசித்து வருகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘கடந்த 58 ஆண்டுகளாக அரசு, மக்களுக்காக ஏராளமானதை செய்துவிட்டது’ என்று இடைத்தரப்பினர் இதில் தலையிடுவதும் கருத்துரைப்பதும் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நீர்த்துப் போகச்செய்வதாகும். அத்துடன், இந்த இடைத்தரப்பினர், தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்ளவும் முற்படுகின்றனர் என்று வருத்தப்பட்டு கொண்டார் கணேசன்.
குறைந்த வருமானம் பெரும் இந்தியர்களுக்காக, குடும்ப மாத ஊதியமாக 3,000 வெள்ளிவரை பெறுவோர், தங்களின் வருமானத்தை இரட்டிப்பாக்க ஆவன செய்யப்படும்; அவர்களுக்காக பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் தீட்டப்படும் என்று செய்து கொண்ட ஒப்பந்தம் 2013 பொதுத் தேர்தலுக்குப் பின் அதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன என்று அரசு பட்டியலிட முடியுமா என்று கணேசன் வினவிகிறார்.
ஹிண்ட்ராஃப் ஒப்பந்தத்தின்படி, இடம்பெயர்ந்த தோட்டத் தொழிலாளர்களுக்காக தேசிய அளவில் 100,000 வீடுகள் 2018-ஆம் ஆண்டுக்குள் வழங்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் கடந்த இரண்டாண்டுகளில் 40,000 வீடுகளாவது வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
அதைப்போல, தோட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்த இளைஞர்களின் மேம்பாட்டிற்காக, நாடு முழுவதும் உள்ள 176 ‘கியாட்மாரா மையங்கள்’, 78 சமூகக் கல்லூரிகள், ஏனைய தொழிற் பயிற்சி நிலையங்களில் எல்லாம் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
நாட்டில் உள்ள ஆலயங்கள், தேவாலயங்கள், இடுகாடுகள் யாவும் நிரந்தர நிலத்தில் நீடிக்க வேண்டும்; மாறாக, இடமாற்றம் செய்யப்படக்கூடாது என்றும் ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், ஆலயங்கள் அவ்வப்பொழுது இடிக்கப்படுவது தொடர்கின்றன.
“ஹிண்ட்ராஃப் இயக்கமும் தேசிய முன்னணி அரசும் கையொப்பமிட்டுக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பற்றி வினா எழுப்பினால், ‘7 புதிய தமிழ்ப் பள்ளிகளுக்கு தேசிய முன்னணி அரசு அங்கீகாரம் அளித்துள்ளது; மெட்ரிகுலேஷன் பயில 1,500 இடங்கள் அளிக்கப்பட்டுள்ளன; தமிழ்ப் பள்ளிகளுக்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது; இணைக்கட்ட வசதி, பாலர் கல்வி வசதி என்றெல்லாம் கல்வித்துறை துணை அமைச்சர் ப. கமலநாதனும் தமிழ்ப் பள்ளிகள் உருமாற்ற செயல் திட்ட பொறுப்பாளர் பேராசிரியர் டத்தோ என்.எஸ்.இராஜேந்திரனும் அறிக்கை விடுவது மக்களைக் குழப்பும் நடவடிக்கையாகும்.”
“எத்தனை ஆண்டுகள் அதையே தொடர்ந்து சொல்லி மக்களைக் குழப்புவீர்கள். அரசு ஒவ்வொரு ஆண்டும் ரிமா 50 பில்லியனை மேம்பாட்டுக்காக மட்டுமே செலவழிக்கிறது. அமைச்சர் ப. கமலநாதனும் பேராசிரியர் டத்தோ என்.எஸ்.இராஜேந்திரனும் சொல்லும் இந்த விசயங்கள் அனைத்தையும் அரசாங்கம் உண்மையிலேயே செய்ய ஒப்புக் கொண்ட திட்டங்களுடன் ஒப்பிடக்கூடாது.”
“தயவு செய்து மக்களைக் குழப்புதை நிறுத்துங்கள்” என்ற கணேசன், பிரதமர்தான் இதற்கு நேரடியாகப் பதில்கூற வேண்டும் என்கிறார்.
குழப்புவதுதானே மா இ க வேலை . அதை தவிர அவர்களுக்கு வேற என்ன தெரியும் ?
அந்த தேர்தலின் போது இப்படி ஒரு ஒப்பந்தம் செய்யப் பட்டிருப்பது உண்மை என்றால் ,அவர்களின் நியாயமான கோரிக்கைக்கு சம்பந்த்தப் பட்டவர் பதில் சொல்வதே நியாயம் !
மற்றவர்கள் மௌனித்திருப்பதெ அவர்களுக்கு கவ்ரவம் !
ம.இ.கா.வை சின்னாபின்னாவாக்கி விட்டு இந்திய சமுதாயத்திற்கு நாமத்தையும் போட்டு விட்டு சென்ற சாமிவேலு இப்ப புதுசா இந்திய சமுதாய பொருளாதார வளர்ச்சி கருத்தரங்கு கூட்டி எவ்வளவு பிரதமரிடம் வாங்கி பையை நிரப்பினார் என்று கேட்க வக்கில்லாத அந்த கட்சிக்காரங்க ஹிண்ட்ராப் செயல் பாடுகளைப் பற்றி கேள்விக் கேட்க தகுதியே இல்லை….?
கோவில்களுக்கு மான்யம், தமிழ்ப்பள்ளிகளுக்கு மான்யம், இப்பொழுது பாலர்பள்ளிகளுக்கு மான்யம். இவை கிடைப்பதை யாரும் குற்றம் சொல்லவில்லை. ஆனால் இவையே இந்திய சமுதாயம் எதிர்நோக்கிடும் பிரச்சினைகளுக்குத் தீர்வாகிவிடாது. 7 இந்திய அரசியல் கட்சிகள் மூலம் அரசாங்க பணப்பட்டுவாடா பெருந்தோல்வி என்றுணர்ந்த பிரதமர் என்.எஸ். இராஜேந்திரனை ஒரு தீர்வாகப் பார்க்கிறார். ஆனால், பேராசிரியர் வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய சமுதாயத்திற்கு …அதுக்கும் மேல…யோசித்து செயல்பட வேண்டும்.
துணையமைச்சர் பதவியை தூக்கி எறிந்தாரே. ஏன்! அப்பதவியினால் இந்திய சமுதாயத்திற்கு அவரால் ஒன்றுமே செய்ய முடியாமல் இருந்தது. அப்படியானால் அவர் வாயை அடைக்கும் முயற்சிதானே அது. அதை உணர்ந்துகொண்டதால் அப்படி செய்தார். அவர் தூக்கி எறிந்ததால்தான் SEDIC என்ற ஒன்று உத்வேகம் அடைந்துள்ளது. வேதா பதவி துறப்பினால் துடிப்பு பெற்றுள்ள SEDICஆவது இந்திய சமுதாயத்தின் துயரைத் துடைத்திடுமா?
அடுத்த பொது தேர்தலுக்கு ஹிண்ட்ராப் காரனுங்க பொரிய தொகையை வாங்க திட்டம் தீட்டுராணுங்க ! டேய் போதுமடா உங்க டிராமா ! பிரிட்டிஸ் அரசுக்கு எதிரான வழக்கு என்னவானது ? அதை கொஞ்சம் சொல்லுங்க !
நாட்டில் வெளியாகும் தினசரி நாளேடுகள் இண்டராப் தொடுத்த வழக்கைப் பற்றி வெளியிட்டிருந்தன, சிலர் தினசரிகளை படிப்பதில்லை போலும். விபரம் தெரியாமல் குறைக் கூறுவதை த யவு செய்து நிறுத்துங்கள். இம்மாதம் முதல் வாரத்தில் வெளியான தினசரிகளை தேடி படியுங்கள். விபரம் தெரியும் தமிழர் நந்தா அவர்களே ! ! !
ஒரு கவிஞர் சொன்னார், ‘தமிழே தமிழனுக்கு உயிராம். அந்தத் தமிழனே தமிழுக்கு தூக்குக் கயிறாம்’. ம.இ.கா.வை ஆரம்பித்தவனும் தமிழன்தான். அந்த ம.இ.கா.வை சாகடித்ததும் தமிழன்தான்.
ஆம் குழம்பாதிர்கள் உங்களுக்கு கிடைக்கும் பாக்கி நிறைய உள்ளது .
உங்க சம்பளமும் கேன்னட்டுக்கும் இSவரனுக்கும் கொடுத்தது EVVAlAVU