‘ஹுடுட்-எதிர்ப்பு வேட்பாளருக்கு வாக்களிப்பது பாவம்’ என்று பதிவிட்டவர்மீது பாஸ் இளைஞர்கள் ஆத்திரம்

pas yபெர்மாத்தாங்  பாவ்  பாஸ்  தலைவர்  ஒருவர்  ஹுடுட்டை  எதிர்க்கும்  வேட்பாளர்களுக்கு  முச்லிம்கள்  வாக்களிக்கக்  கூடாது  என்று  பதிவிட்டிருப்பதைக்  கண்டு பாஸ்  இளைஞர்  பிரிவு  கொதிப்படைந்துள்ளது.

அவ்வாறு  பதிவிட்ட  அத்தொகுதி  உலாமா விவகாரப்  பிரிவுத்  தலைவர்  பத்ருல்  அப்துல்  ரஹ்மான், அப்படிப்பட்ட  வேட்பாளர்களுக்கு  வாக்களிப்பது “ஹராமாகும்”  என்றார்.

அவருடைய  பதிவுக்கு  முக்கியத்துவம்  கொடுத்து  மலாய்மொழி  நாளேடுகளான  உத்துசான்  மலேசியாவும்  சினார்  ஹரியானும் அப்படியே  வெளியிட்டிருந்தன.

பத்ருலுக்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்  என  பாஸ்  இளைஞர்  தலைவர்  சுஹாய்சான்  காயாட்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

“அவரது  பதிவால்  பிரச்னை  வரலாம். அதனால்  அவரைக்  கண்டிக்க  வேண்டும் என  ஷுரா  மன்றத்திடம்  கேட்டுக்  கொண்டிருக்கிறோம்”, என்றாரவர்.