1மலேசியா மேம்பாட்டு நிறுவனம்(1எம்டிபி) செய்த கொள்முதல்களையெல்லாம் கணக்கிடும் சிரமமான பணியை மேற்கொண்ட டாக்டர் மகாதிர் முகம்மட் ரிம27 பில்லியனுக்குக் கணக்கில்லை என்கிறார்.
“தெரிந்த கொள்முதல்களைக் கூட்டிப் பார்த்தால் ரிம14.7 பில்லியன் வருகிறது. மீதமிருப்பது ரிம27 பில்லியன்.
“ஒரு பில்லியனுக்குமேல் பெட்ரோ சவூதிக்கு, அந்நிறுவனத்தின் மதிப்பையோ அதன் சொத்துகளையோ சரிபார்த்துக் கொள்ளாமல் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
“மீதமுள்ள பணம் எங்கே?”, என்று மகாதிர் அவரது மிக அண்மைய வலைப்பதிவில் வினவியுள்ளார்.
1எம்டிபி செய்த கொள்முதல்களை மகாதிர் பட்டியலிட்டுள்ளார்:
1) Tanjong Energy (இப்போது Powertek Energy Sdn Bhd) – ரிம8.5 பில்லியன்
2)Genting Sanyan Power (இப்போது Kuala Langat Power Plant) – ரிம2.3 பில்லியன்
3)Jimah Energy – RM1.2 பில்லியன்
4) ஜாலான் துன் ரசாக்கில் (துன் ரசாக் இணைப்பகத்திற்கு) நிலம் வாங்கியது – ரிம320 மில்லியன்
5)முன்னாள் சுங்கை பீசி அரச ஆகாயப்படை விமான நிலையத்தில் (இப்போது பண்டார் மலேசியா) 495 ஏக்கர் நிலம் வாங்கியது – ரிம 363.5 மில்லியன்
6)பினாங்கு ஆயர் ஈத்தாமில் 234 ஏக்கர் நிலம் வாங்கியது – ரிம1.38 பில்லியன்.
இவை தவிர, 1எம்டிபி-க்கு நிலத்தைக் குறைந்த விலைக்கு விற்ற வகையில் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட இழப்பு கிட்டதட்ட ரிம25 பில்லியன் என்றும் மகாதிர் கூறினார்.
“Mr PM,you’re not alone.we the rakyat will always be with you” mamak kutty talking as though he is a saint.Expose his ill gotten wealth!
கோவிந்தா!, கோவிந்தா!.
திருடனுக்கு தான் திருடனை பற்றி நன்றாக தெரியும்
அந்த பணம் ரோசமா இதுல இருக்கு ! I MEAN ரோச்மாஹ் வங்கியிலே
காணாமல் போனது ரிம27 பில்லியனாக இருக்காது,
ரிம27 வெள்ளிதான், அந்த ரிம27 வெள்ளிக்கு தெருவோரத்தில் இருக்கும் கடையில் ஒரு வாழைபழம் வாங்கியது கணக்கில் விடுபட்டு விட்டது என்று கூறினால், மாமா மகாதீர் என்ன பண்ணுவார் ?
பேங்க் நெகரா அந்நியச் செலவாணி வாணிபத்தில் ஈடு பட்டு பல கோடி வெள்ளி நஷ்டப் பட்டப்ப ‘it is only paper loss’ – ன்னு சொன்னவர்தான் நம்ப மாமக்தீர். மாமி உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடமா?. நம்பிக்கை நாயகனும் அப்படியே ‘it is only paper loss’ -ன்னு சொல்லி விட்டுப் போக போகின்றார். மக்கள் பணத்திற்கு முன்னாள் இருந்தவர் போட்ட நாமம்தான் பின்னால் வந்தவரும் போடப் போகின்றார். இறுதியில் ஓட்டுப் போட்ட மக்களே ஏமாளி & கடனாளி!.
MH 370 போல் மறைந்துவிட்டது.
அந்த பணம் ரோஸ் அக்கா மோதிரம், கை கடிகாரம்மும்தான்.