பாகிஸ்தான்: விமானத் தாக்குதலில் 22 பயங்கரவாதிகள் பலி

pakistanபாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த கைபர் பகுதியில் வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட விமானத் தாக்குதலின்போது, தற்கொலைப் படையினர் 3 பேர் உள்பட 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

கைபர் பகுதியின் திரா பள்ளத்தாக்கில் தொடர் விமானத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. அதில், தற்கொலைப் படையினர் 3 பேர் உள்பட 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதிகளின் மறைவிடத்தை விமானங்கள் தகர்த்ததோடு, அவர்களின் ஆயுதக் குவியல் அழிக்கப்பட்டது. வனப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ராணுவ நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக, இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றன.

முன்னதாக, வடக்கு வஸிரிஸ்தான் மாகாணத்தில் புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட விமானத் தாக்குதல்களில் 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

-http://www.dinamani.com

TAGS: