சவூதி தலைமையிலான கூட்டுப் படை, யேமனில் மீண்டும் வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது.
கிளர்ச்சியாளர்களின் நிலைகளைக் குறிவைத்து வியாழன் இரவு நிகழ்த்திய தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர் என்று சவூதி பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏறத்தாழ ஒரு மாத காலமாக, நிகழ்ந்து வந்த கூட்டுப் படையினரின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவுக்கான சவூதி தூதர் வாஷிங்டனில் புதன்கிழமை கூறினார்.
யேமனில் கிளர்ச்சியாளர்கள் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அங்கு கூட்டுப் படையின் வான்வழித் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கும் என்று அவர் எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், வியாழக்கிழமை மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் கிளர்ச்சியாளர்கள் 23 பேர் கொல்லப்பட்டதாக சவூதி பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, யேமனுக்கான ஐ.நா.வின் புதிய தூதராக மோரிடேனியாவைச் சேர்ந்த இஸ்மாயில் சேக் அஹமதை நியமிக்கவுள்ளதாக ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் தெரிவித்தார்.
-http://www.dinamani.com