நேபாள நாட்டுப்புற கதையில் சொன்ன மாதிரியே தாக்கிய பெரிய நிலநடுக்கம்! 80 வருட திடுக் தகவல்கள்!! இது அறிவியலா.. அனுபவமா?

earth-nepal-1காத்மாண்டு: நிலநடுக்கம் குறித்து நேபாள நாட்டு மக்களிடையே நிலவும் ஒரு செவிவ்வழிக் கதை மீண்டும் உண்மையாகி நிரூபணமாகியுள்ளது.

நேபாளத்தை பொருத்தளவில், நீண்ட நூற்றாண்டுகளாகவே, மக்கள் மத்தியில் ஒரு செவிவழிச் செய்தி உலவிவருகிறது. அதாவது, ஒவ்வொரு 80 வருடங்களுக்கு ஒருமுறையும், நேபாளம் மிகப்பெரிய நிலநடுக்கத்தை சந்திக்கும்..என்பதுதான் அந்த செவிவழிச் செய்தியாகும்.

இதேபோல 1934ம் ஆண்டு, நேபாளத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளம்-பீகார் நிலநடுக்கம் என்று அது அழைக்கப்பட்டது.

இந்த பெரிய நிலநடுக்கத்தில், 12 ஆயிரம் பேர் நேபாள நாட்டில் உயிரிழந்தனர். இந்தியாவில் 7 ஆயிரம் பேர் இறந்தனர்.இதன்பிறகு சிறிய அளவில் பலமுறை நேபாளத்தில் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், பெரிய உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அவை கிடையாது.

இந்நிலையில், நேபாள நாட்டு மக்கள் மத்தியில் கடந்த சில ஆண்டுகளாகவே நில நடுக்க பீதி அதிகரிக்க தொடங்கியது. அதிலும், முதியவர்கள் எப்படியும் பெரிய நிலநடுக்கம் வந்தே தீரும் என்று எச்சரித்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில்தான், 2011ம் ஆண்டு பெரிய ஒரு நிலநடுக்கம் நேபாளத்தை தாக்கியது. 6.9 என்ற ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவானாலும், அதிருஷ்டவசமாக உயிரிழப்பு 11 பேருடன் முடிந்தது.

பெரும்பாலான நேபாள இளைஞர்கள் தாங்கள் பெரிய பாதிப்பில் இருந்து தப்பிவிட்டதாக நம்பினர். ஆனால் முதியவர்களோ, பெரிய அளவுக்கு பாதி்பை ஏற்படுத்தும் நில நடுக்கம் வந்தே தீரும் என்று கூறிக்கொண்டிருந்தனர்.

இன்று நேபாளத்தை தாக்கியது அதுபோன்ற பெரிய நிலநடுக்கமாகும். ஏனெனில், ரிக்டர் அளவுகோலில் இது 7.9 ஆக பதிவாகியுள்ளது.

1934ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் இதுவாகும். அதேபோல மக்கள்தொகை பெருக்கம் காரணமாக, உயிர்பலி எண்ணிக்கையும், 80 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இப்போது அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அறிவியல் என்ன சொல்கிறது?

நேபாள நாட்டு மக்களுக்கு தலைமுறை தலைமுறையாக இதுபோன்ற ஒரு தகவல் கடத்தப்படுவதன் பின்னணியில் அறிவியல் உண்மையும் உள்ளது.அதாவது, இந்திய புவித்தட்டு, எப்போதுமே யூரோஏசியன் புவித்தட்டை அழுத்தியபடி மேலே எழும்பிக் கொண்டுள்ளது. எனவேதான், இமயமலை ஆண்டுக்கு 1 செ.மீ அளவுக்கு வளர்ந்து கொண்டுள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

பல ஆண்டுகளாக தொடரும் இந்த அழுத்தத்தை, ஒரு நிலநடுக்கத்தின் மூலம், குறைத்துக்கொள்வது பூமியின் இயல்பு என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இந்த காலகட்டத்தை நேபாள நாட்டு பெரியவர்கள் கணித்துதான், செவிவழியாக சொல்லி வந்துள்ளனர்.

நேபாளம், டெல்லி, சென்னையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.9 ஆக பதிவு! நேபாளத்தில் 1500 பேர் பலி?

இந்தியாவின் வடக்கு பகுதிகளான டெல்லி, பாட்னா மற்றும் லக்னோவில் 7.4 ரிக்டர் அளவில் பலத்த நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.

இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்க அதிர்வுகள் சுமார் 30 விநாடிகளில் இருந்து 4 நிமிடங்கள் வரை உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இச்சம்பவத்தில் நேபாளத்தில் 700 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய தனியார் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

செல்போன் சேவை பாதிப்பு

இந்தியாவின் வட மாநிலங்களில் இன்று முற்பகலில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், பீகார் மாநிலத்தில் செல்போன் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் குறித்து தகவல் அறிந்ததும், உறவினர்கள் பலரும் தொலைபேசி வாயிலாக உறவினர்களை தொடர்பு கொள்ள முயன்றதால், பல இடங்களில் செல்போன் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் மற்றும் வட இந்தியாவில் ஒரு சில இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7. 4 ஆக பதிவானதாக கூறப்படுகிறது. தில்லியில் 45 வினாடி இந்த நிலநடுக்கம் உணரப் பட்டுள்ளது.

ஜெய்பூர், ராஞ்சி, கவுகாத்தி, பாட்னா, நேபாள், ஒடிசா, பெங்கால், உத்தரப் பிரதேசம் ஆகிய வடமாநிலங்களிலும் தமிழகத்தில் சென்னையிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.  இதனால் மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

தில்லியில் நிலநடுககம் காராணமாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தில்லியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுதான் மிகப்பெரிய நிலநடுக்கம் என கூறப்படுகிறது.

மோடி நிலநடுக்க பாதிப்புகள் குறித்து தகவல்கள் சேகரிப்பு:

புது தில்லி உட்பட வட மாநிலங்களில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்புகள் குறித்து தகவல்கள் சேரிக்கப்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நிலநடுக்கம் பாதித்த மாநில முதல்வர்களை தொலைபேசியில் அழைத்து பாதிப்புகள் குறித்தும் பிரதமர் மோடி தகவல் அறிந்து வருகிறார்.

தில்லி மற்றும் வட இந்திய மாநிலங்களின் பல இடங்களில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7. 4 ஆக பதிவானதாக கூறப்படுகிறது. தில்லியில் 45 வினாடிகள்  இந்த நிலநடுக்கம் உணரப் பட்டுள்ளது.

நிலநடுக்கத்தை உணர்ந்த பொதுமக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு கட்டடங்களில் இருந்து வெளியே வந்து திறந்த வெளியில் தஞ்சம் அடைந்தனர்.

ஜெய்பூர், ராஞ்சி, கவுகாத்தி, பாட்னா, நேபாள், ஒடிசா, பெங்கால், உத்தரப் பிரதேசம் ஆகிய வடமாநிலங்களிலும் தமிழகத்தில் சென்னையிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

தில்லியில் நிலநடுக்கம் காராணமாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தில்லியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுதான் மிகப்பெரிய நிலநடுக்கம் என கூறப்படுகிறது.

நிலநடுக்கத்தினால் உருக்குலைந்தது நேபாளம்; 1500 பேர் பலி?

நேபாளத்தில் இன்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்து மிகப்பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது.

ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கி  படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், சுமார் 1500 பேர் வரை பலியாகி இருக்கலாம் என ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்ற

நேபாளத்தில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 என்ற அளவில் பதிவானதாக தகவல் வெளியானது. அதன்பின்னர், மக்கள் தொகை அதிகம் உள்ள தலைநகர் காட்மாண்டுவை உலுக்கிய நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியிருந்தது தெரியவந்தது. குடியிருப்புகள்  மற்றும் கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அலறியபடி  வெளியேறி சாலைகளில் குழுமினர்.

தர்காரா டவர்  இடிந்து விழுந்தன

எங்கு திரும்பினாலும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சைரன் ஒலி எழுப்பியபடி சென்றன. அரசு ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமடித்தபடி  மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன.

காட்மாண்டுவில் இருந்த 19ஆம் நூற்றாண்டு பழமையான 9 மாடிக் கட்டடமான “தரகரா” டவர் முழுமையாக இடிந்து விழுந்தது. அக்கட்டடத்தில் இருந்த 400 பேர் மண்ணோடு மண்ணாக புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. ஒருவரின் உடல் மற்றும் கிடைத்துள்ளது.

பீஸ்மன் டவர் என்றும் அழைக்கப்படும் இக்கட்டடம் 61.88 மீட்டர் உயரமானது. காட்மாண்டுவின் சுந்தரா என்னும் மையப்பகுதியில் 1832 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கட்டடம் அதன் கட்டடக் கலைக்காக யுனோஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டதாகும்.

காட்மாண்டு விமான நிலையம் மூடல்

இதனிடையே மீண்டும் நில நடுக்கம் ஏற்படலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால்இ காட்மாண்டுவில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

பழைய காட்மாண்டு நகரில் உள்ள ஒரு பகுதியில் குறுகிய சந்தில் உள்ள வீடுகள் ஒன்றின் மேல் ஒன்று விழுந்து நொறுங்கின. உயிரிழப்பு தொடர்பான தகவல் வெளியாகவில்லை. மேலும் பல நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் வீடுகளுக்கு செல்லாமல்  வெளியில் இருக்கும்படி நேபாளத்தின் தேசிய வானொலி எச்சரிக்கை விடுத்துள்ளது.

1500 பேர் பலி?

இந்நிலையில் மிக மோசமான இந்த நிலநடுக்கத்தினால் சுமார் 1500 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்றும், இடிபாடுகளை அகற்றினால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளதாகவும் ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. தலைநகர் காட்மாண்டுவில் மட்டும் சுமார் 200 பேர் வரை பலியாகி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே காட்மாண்டு மருத்துவமனையில் 36 உடல்கள் வைக்கப்பட்டுள்ளதாக மற்றொரு ஏஜென்சி தகவல் தெரிவிக்கிறது.

மீட்பு பணிகள் தீவிரம்

இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கவும், பலியானவர்களின் உடல்களை அகற்றவும், இடிபாடுகளை அகற்றவும் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நேபாள பிரதமருடன் மோடி பேச்சு

நிலநடுக்கத்தினால் நேபாளம் மிக மோசமாக உருக்குலைந்துள்ள நிலையில்இ நேபாள பிரதமர் ராம் பரன் யாதவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி, நிலைமையை கேட்டறிந்தார்.

இந்திய விமானப்படை விமானங்கள் நேபாளம் விரைவு

இதனிடையே நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையை சேர்ந்த 2 விமானங்கள், உத்தரபிரதேச மாநிலம் ஹின்டன் விமான தளத்தில் இருந்து நேபாளம் விரைந்துள்ளன.

இந்திய தூதரக ஊழியர் மகள் பலி

இந்நிலையில் நிலநடுக்கம் காரணமாக தலைநகர் காட்மாண்டுவில் இந்திய தூதரக வளாகத்தில் உள்ள ஒரு வீடு இடிந்து விழுந்ததில் இந்திய தூதரக ஊழியர் ஒருவரின் மகள் உயிரிழந்து விட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com