வாடிகனில் தீவிரவாத தாக்குதல் நடக்கவிருந்ததை பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள பெர்காமோ நகரில் மத தலைவர் வீடு ஒன்றில் சிலர் பதுங்கியிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைதொடந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார், வீட்டை முற்றுகையிட்டு அங்கிருந்த 18 பேரை கைது செய்தனர்.
அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும் இவர்களுக்கு அல்கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதும் கண்டறிப்பட்டது.
இதன்பின் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வீடியோ கேசட்டுகளில் அவர்கள் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மற்றும் வாடிகனில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தெரியவந்துள்ளது.
வீடியோவில் பதிவான விவாதத்தில் இத்தாலியிலும் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து இருந்தனர்.
மேலும் அவர்கள் பேச்சின் போது ‘பாபா’ என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்தியுள்ளனர். அது போப் ஆண்டவரை குறிப்பிடுவதாக இருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.
இந்நிலையில் இது தாக்குதலுக்கான ஆதாரம் அல்ல என்றாலும் தாக்குதலுக்கான சதி திட்டம் என்பதில் பலத்த சந்தேகம் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
-http://world.lankasri.com