பக்கத்தான் எம்பிகள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என பாஸ் உதவித் தலைவர் ஷுசாம் மூசா பரிந்துரைத்துள்ளார்.
அதையும் அம்னோ, பிஎன் உதவியுடன் செய்ய வேண்டுமாம்.
டாக்டர் மகாதிர் அம்னோவை வலுப்படுத்த நினைக்கையில், 1மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தால் நாடு அழிந்து போகாமல் காக்க எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதைச் செய்ய வேண்டும் என ஹுசாம் வலியுறுத்தினார்.
“உண்மைகளையும் ஆதாரங்களையும் அடிப்படையாக வைத்து மகாதிர் ஒவ்வொரு நாளும் முன்வைக்கும் கேள்விகளைப் புறக்கணிக்கும் பிரதமர் சாதாரண மக்களின் கேள்விகளுக்கும் குறைகூறலுக்குமா விளக்கமளிக்கப் போகிறார்?”, என்றவர் வினவினார்.
அவரசபடாதிங்க!. பொறுமை, பொறுமை. போற போக்கைப் பார்த்தால் அம்னோ தானாகவே அழிந்துவிடும்.