பல உயிர்களை கொன்று குவித்த ஐ.எஸ் தலைவர் பலி: ஈரான் அறிவிப்பு

alabkthathi_001உலகையே அச்சுறுத்தி வந்த ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அல் பாக்தாதி இறந்துவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஈராக், சிரியா ஆகிய நாடுகளை தளமாக கொண்டு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் இயங்கி வருகிறது.

அதன் தீவிரவாதிகள், உலகின் பல நாடுகளில் வேரூன்றி உள்ளனர். ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை போரிட்டு வருகிறது.

இந்நிலையில், ஈராக்கில் கடந்த மாதம் 18–ம் திகதி சிரியா எல்லையை ஒட்டியுள்ள அல்–பாஜ் கிராமத்தில் ஒரு குழுவுடன் அல் பாக்தாதி தங்கி இருந்தபோது, அமெரிக்க கூட்டுப்படை நடத்திய தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்தார்.

இந்த செய்தியை பிரித்தானிய நாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது.

ஈராக் அரசு ஆலோசகர் ஹிஷாம் அல்–ஹஷிமி என்பவரும் இச்செய்தியை உறுதிப்படுத்தினார்.

தொடக்கத்தில், அல் பாக்தாதியின் உயிருக்கு ஆபத்தான அளவுக்கு காயம் இருந்தது. ஆனால், அப்போதிருந்து அவர் மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறார்.

இருப்பினும், ஐ.எஸ். இயக்கத்தின் அன்றாட பணிகளை நிர்வகிக்கும் அளவுக்கு அவர் இன்னும் தயாராகவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

காயம் அடைந்து சிகிச்சை பெற்றுவந்த அல்-பாக்தாதி தற்போது இறந்துவிட்டார் என்று ஈரான் வானொலி அறிவித்துள்ளது. ஆனால் இந்த செய்தி உறுதி செய்யப்படவில்லை.

-http://world.lankasri.com