போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு சற்று முன்னர் நிறைவேற்றப்பட்ட மரணதண்டனைக்கு பதிலாக மாற்று வழியில் தண்டனையை வழங்கி இருக்கலாம் என சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான சர்வதேச மன்னிபு சபையின் இயக்குநர் Rupert Abbott மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
சர்வதேச அளவில் இந்தோனேசிய அரசாங்கத்துக்கு இவ் மரணதண்டனையை ரத்துச் செய்யுமாறு கேட்டபோதிலும் இந்தோனேசிய அரசு குறிக்கப்பட்ட நாளில் இக் குற்றவாளிகளுக்கான தண்டனையை வழங்குவோம் என உறுதியாக தெரிவித்திருந்தது.
இவ்வாறு இந்தோனேசிய அரசு தனது உறுதியில் இருந்து சற்றும் தளராது தண்டனையை நிறைவேற்றியமை என்பது மனித உரிமை மீறல் செயலே என தெரிவித்திருந்தார்.
போதைபொருள் கடத்தல் என்பது தண்டனைக்குரியை குற்றமாக இருப்பினும் அதற்கான தண்டனை மரண தண்டனை என்பது கொடூரமான தண்டனையே. அக்குற்றத்திற்கான தண்டனை வழங்குவதற்கு மரணதண்டனையை விடுத்து வேறு வழியில் அக்குற்றவாளிகளை தண்டித்திருக்கலாம் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.
இக்குற்றவாளிகள் சிறைவாசம் இருந்தபோதில் இவர்களுக்கென வாதாடிய சட்டத்தரணிகள் தெரிவித்த கருத்துக்களை இந்தோனேசிய அரசு செவிமெடுக்க தயார்நிலையில் இல்லாது இவர்களுக்கான தண்டனையை நிறைவேற்றுவதிலேயே குறியாக இருந்தது,
மேலும் இக்குற்றவாளிகளுள் ஒருவரான நைஜீரியாவைச் சேர்ந்த ரொட்ரிகோ குலார்தே என்பவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்த போதிலும் அவருக்கான மரண தண்டனையை வித்தித்தமை இந்தோனேசிய அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் செயல் என Rupert Abbott தெரிவித்திருந்தார்.
மயூரன், அன்ரூ சான் உட்பட ஏனைய அறுவருக்கும் தண்டனை நிறைவேற்றம்!
போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களான, மயூரன் சுகுமார் (ஈழத் தமிழர்) மற்றும் அன்ரூ சான் ஆகியோருக்கும் ஏனைய அறுவருக்கும் சற்று முன்னர் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. 12 பொலிஸார் சூழ்ந்திருக்க இவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்தோனேசிய செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐ.நா. உயரதிகாரிகள், அவுஸ். அதிகாரிகள், பிலிப்பைன்ஸ் அதிகாரிகள், உறவினர்கள், கருணை உள்ளம் கொண்ட மக்கள் என சர்வதேச அளவில் அனைவரும் இந்தோனேசிய அரசிடம் தண்டனையை ரத்து செய்யுமாறு கேட்டபோதிலும், தண்டனையை நிறைவேற்றியுள்ளது இந்தோனேசிய அரசாங்கம்.
எனினும் இவர்களுடன் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒன்பதாவது நபரான பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த மேரி ஜேன் வெலொசோ என்னும் பெண்ணின் மரணதண்டனை கடைசி நேரத்தில் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது.
போதைமருந்தை கடத்துவதற்கான கருவியாக மேரி ஜேன் வெலொசோவை தான் பணியில் அமர்த்தியதாக கூறி பெண் ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டின் காவல்நிலையத்தில் தன்னைத்தானே ஒப்படைத்துக் கொண்டதைத் தொடர்ந்து, மேரிக்கான மரணதண்டனை நிறைவேற்றம் தாமதப்படுத்தப்பட்டிருக்கிறது.
எனினும் பிலிப்பைன்ஸ் அரசு, இந்தோனேஷிய Attorney-General-க்கு மரண தண்டனையை தடை செய்யுமாறு ஒரு அவசர கடிதத்தை அனுப்பியமையை அடுத்தே இப்பெண்ணின் தண்டனை இறுதி நேரத்தில் தள்ளிப் போயிருக்கின்றது.
ஏனைய எண்மரும், அவுஸ்திரேலியக் குடியுரிமை பெற்ற இலங்கை, இந்தோனேசியா, மற்றும் நைஜீரியா, பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
தனது குடிமக்களான மயூரன் , மற்றும் சான் ஆகியோர் மரணதண்டனையில் கொல்லப்பட்டால் அதற்கான எதிர்வினைகளுக்கு இந்தோனேஷியா முகம் கொடுக்கவேண்டி வரும் என்று அவுஸ்திரேலியா எச்சரித்திருந்த போதிலும் குற்றவாளிகளை தண்டித்து தடுப்பதற்காகவே இந்த தண்டனை நிறைவேற்றப்படுவதாக இந்தோனேஷியா தெரிவித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
-http://www.tamilwin.com
இந்தோனேசியர்கள் எத்தனை பேருக்கு உலக அரங்கில் போதை பொருளுக்கு மரண தண்டனை கொடுத்துள்ளது என்று இந்தோனேசியா சொல்ல வேண்டும்.
நம்மவர்கள் இனிமேல் தங்களின் நலன்கள் கருதி இந்தோனேசியாவிற்க்கு சுற்றுப் பயணங்கள் மேற்க் கொள்வதை தவிர்ப்பது நன்று.