பினாங்கு பாஸ் இளைஞர்களிடையே ஒரு திடீர் மாற்றம். பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலின்போது பிகேஆருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளைச் செய்யப்போவதில்லை என்று கூறி வந்தவர்கள் இப்போது அதன் தேர்தல் பரப்புரையில் உதவப்போவதாக அறிவித்துள்ளார்கள்.
“பாஸ் மத்திய தலைமைத்துவ உத்தரவைப் பின்பற்றி பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலில் உதவுவது என்று ஏகமனதாக முடிவு செய்துள்ளோம்”, என பினாங்கு பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் முகம்மட் யுச்னி மாட் பியா கப்பாளா பத்தாஸில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நேற்றிரவு தேசிய பாஸ் இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் முகம்மட் காலில் அப்துல் ஹாடியைச் சந்தித்த பிறகு அம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார். முகம்மட் காலில் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கின் மகனாவார்.
ஆனாலும், மாநில பாஸ் இளைஞர் பிரிவு, ஹாடி-க்கு எதிராகக் கூறிய அவதூறுகளை பிகேஆர் இளைஞர்கள் மீட்டுக்கொள்ள வேண்டும் என்பதில் இன்னமும் உறுதியாக இருப்பதாய் முகம்மட் யுஸ்னி கூறினார்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியுது!.
ஹடி அவாங் பி.என்.கைகூலி அவாங்கின் மகன் நீ மட்டும் என்ன அந்த வழிதானே…? உங்க ஆதரவு இல்லாமலே வான் அசிசா வெற்றி உறுதியானது…!
ஆமாம் ரொம்பின் ல உங்க PAS தானே போட்டி போடுது ,,ஆதரவு வேணும்ல ,அதான் இந்த இளைஞர் அணி கூவுது
புருடா…விட்டு திரிகிறார்கள் இந்த மக்கள் கூட்டனி மக்கைகள்…வரும் ஆனா வராது …அப்படி இருக்கு மாங்கா கூட்டனி காமடி …