வட கொரியாவில் 2 துணை மந்திரிகள் உட்பட 15 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தென்கொரியா உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் அதிபரின் கொள்கைகளை எதிர்த்ததற்காக 2 துணை மந்திரிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
அதில் ஒரு மந்திரி வடகொரியாவில் காடு பகுதிகளை அதிகரிக்க வேண்டும் என்ற திட்டத்தை எதிர்த்த சாதாரண காரணத்துக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வடகொரியா நாட்டில் கிம் ஜாங் உன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இது இரும்பு திரை கொண்ட நாடாக திகழ்கிறது. இங்கு நடக்கும் விடயங்கள் எதுவுமே வெளியே தெரிவதில்லை.
இந்நிலையில் இந்த தகவலை தென்கொரியா உளவு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு அதிபரின் சொந்த மாமாவுக்கே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-http://world.lankasri.com

























