ஐ.எஸ் தீவிரவாதிகளின் வெறியாட்டம்: 300 யாஸிதி மக்களை கொன்று குவித்த கொடூரம்

yazidi-refugees-APயாஸிதி இனத்தை சேர்ந்த 300 பிணையக்கைதிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொன்று குவித்துள்ளதாக தற்போது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஈராக்கில் உள்ள யாஸிதி(Yazidi) இனத்தை சேர்ந்த நூற்றுக்கணக்காணவர்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் கடந்த 2014ம் ஆண்டு கடத்தி சென்றனர். அவர்கள் எங்கு சிறை வைக்கப்பட்டிருந்தனர் என எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில், கடத்தி சென்ற யாஸிதி இன மக்களில் சுமார் 300 பேரை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொடூரமாக கொன்றுள்ளதாக ஈராக்கில் உள்ள Yazidi Progress Party கடந்த வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டது.

ஈராக்கின் துணை ஜனாதிபதியான Osama al-Nujaifi குறிப்பிடுகையில், இந்த படுகொலை மிகவும் கொடூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமானது என கண்டித்துள்ளார்.

தற்போது நடந்துள்ள இந்த படுகொலை எப்படி, எதனால் செய்யப்பட்டது என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஐ,எஸ் தீவிரவாதிகளின் வலுவான பகுதியான மோசூலில்(Mozul) யாஸிதி இனத்தை சேர்ந்த எண்ணற்ற மக்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க தலைமையிலான சர்வதேச இராணுவங்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளின் இருப்பிடங்கள் மீது தொடர்ந்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

சமீபத்தில் நடத்திய தாக்குதல் ஒன்றில், ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவரான அல் பாக்தாக்தி கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது.

பின்னர், அவர் தாக்குதலில் பலியாகவில்லை என்றும், பலத்த காயங்களுடன் ஒரு ரகசிய இடத்தில் மருத்துவ சிகிச்சை பெற்றுவருவதாகவும் செய்தி வெளியானது.

ஐ.எஸ் அமைப்பின் மீதான தாக்குதலை கண்டித்து, யாஸிதி இன மக்களை தீவிரவாதிகள் கொன்று இருக்கலாம் என சந்தேகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

-http://world.lankasri.com