பலியான 5000 லிபியா அகதிகள்…பத்திரமாக மீட்கப்பட்ட 217 பேர்: துயர சம்பவம்

libia_refugee_001லிபியாவிலிருந்து இத்தாலி நாட்டிற்கு புறப்பட்ட அகதிகள் 217 பேரை பிரான்ஸ் கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா மற்றும் லிபியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோரி மத்திய தரைக்கடல் வழியாக படகுகளில் ஆபத்தான பயணங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

2015ம் ஆண்டு தொடக்கம் முதல், மத்திய தரைக்கடல் வழியாக பயணித்த சுமார் 5000 அகதிகள் இதுவரை படகுகள் விபத்தில் பலியாகியுள்ளனர்.

இதுபோன்ற விபத்துக்களை தடுக்கும் விதத்தில் ஐக்கிய நாடுகளின் சபை சில ரோந்து படகுகளை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பியுள்ளது.

இந்நிலையில், லிபியாவிலிருந்து நூற்றுக்கணக்காணவர்கள் இத்தாலி நோக்கி பயணம் செய்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பிரான்ஸின் Commandant Birot என்ற கடற்படையை சேர்ந்த 3 படகுகள் கடந்த செவ்வாய் கிழமை அனுப்பப்பட்டது.

ஐ.நா ரோந்து படகுகளுக்கு உதவியாக சென்ற இந்த படகுகள், லிபியாவிலிருந்து புறப்பட்ட சுமார் 217 பேரை கடந்த சனிக்கிழமை பத்திரமாக மீட்டனர்.

இந்த அகதிகளில் இரண்டு பேர் கடத்தல்காரர்கள் என கண்டுபிடிக்கப்பட்டதால், அவர்கள் இருவரையும் இத்தாலி பொலிசாரிடம் ஒப்படைக்கப்படும் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் கடற்படையுடன் இணைந்து இத்தாலிய நாட்டு 6 மீட்பு படகுகளும் ஈடுபட்டிருப்பதாகவும், மீட்பு பணிகள் இன்னும் முடிவடையவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் லிபியாவை சேர்ந்த 220 பேரை பத்திரமாக மீட்டு இத்தாலியில் உள்ள Lampedusa என்ற தீவுப்பகுதியில் தங்க வைத்துள்ளதாக பிரான்ஸ் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

-http://world.lankasri.com