பொதுமக்கள் 80 பேர் படுகொலை: நைஜீரிய ராணுவம் மீது குற்றச்சாட்டு

Nigeriaநைஜீரியாவில் 80-க்கும் மேற்பட்ட பொதுமக்களை அந்த நாட்டு ராணுவம் படுகொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அந்த நாட்டின் பிளாட்டோ மாகாணத்தில், 6 வீரர்கள் படுகொலை செய்யப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில் ராணுவம் இந்தச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வாúஸ பகுதி நிர்வாகத் தலைவர் ஜெஸ்ஸீ மிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வாúஸ மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் ராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் 80 பேர் உயிரிழந்தனர் என்றார் அவர்.
12-க்கும் மேற்பட்ட கவச வாகனங்களில் வந்து, ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்டதாக அந்தப் பகுதிகளில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வாúஸ பகுதியில் வசிக்கும் தரோக் பழங்குடியினத்தவரின் தலைவர் ஜாங்கல் லோஹ்பட், மாகாணத் தலைநகர் ஜாஸில் கூறியதாவது:
தரோக் மற்றும் பிற பழங்குடியினத்தவர் வசிக்கும் கிராமங்களில் ராணுவத்தினர் தாக்குதல் நிகழ்த்தினர்.

இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.

2 போலீஸார், பல உள்ளூர் காவல் படையினரும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர் என்றார் அவர்.

தரோக் பழங்குடியினத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், 6 ராணுவத்தினரை படுகொலை செய்து, அவர்களது உடல்களை சிதைத்ததாகக்
கூறப்படுகிறது.

வியாழக்கிழமை நடைபெற்ற இந்தச் சம்பவத்துக்குப் பழிவாங்கவே ராணுவம் இந்தத் தாக்குதலை நிகழ்த்தியதாக பழங்குடியின இளைஞர் அமைப்புத் தலைவர் ஷஃபீ சாம்போ கூறினார்.

ராணுவம் மறுப்பு: இதனிடையே, இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் இக்வேடிசி இவேஹா கூறியதாவது:
பிளாட்டோ மாகாணத்தில் பொதுமக்கள் மீது ராணுவம் தாக்குதல் நிகழ்த்தியதாகக் கூறப்படுவது தவறான தகவலாகும்.

மக்களின் பாதுகாப்புக்காக அங்கு சென்றுள்ள ராணுவத்தினர், எதற்காக மக்களின் மீதே தாக்குதல் நிகழ்த்த வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

-http://www.dinamani.com