பெர்மாத்தாங் பாவ் முன்னாள் எம்பி அன்வார் இப்ராகிம், தாம் சிறைக்கைதியாக இருந்தாலும் தமக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் அவர், குதப்புணர்ச்சிக் குற்றச்சாட்டில் ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும் அத்தீர்ப்புக்கு எதிராக மனு செய்திருப்பதாகக் கூறினார்.
தாம் பெர்மாத்தாங் பாவில் ஒரு தகுதிபெற்ற வாக்காளர் என்றும் கடந்த ஆண்டு 13வது பொதுத் தேர்தலில் வாக்களித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
எனவே, தம்மை தகுதியுள்ள வாக்காளராக அறிவிக்க வேண்டும் என அவர் கோரினார். ஒருவேளை தம்மை வாக்களிக்க அனுமதிக்காவிட்டால் அதற்கு இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதனிடையே வழக்குரைஞர் என்.சுரேந்திரன், இது சிறைக்கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டா என்பதைத் தீர்மானிக்கும் ஒரு சோதனை வழக்காக அமையும் என்றார்.
“அன்வாருக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்று இசி கூறுவது தவறு என்பதுடன் அது அரசமைப்பு விதிக்கும் முரணாக உள்ளது”, என்றாரவர்.
இந்த மனுவை தள்ளுபடி செய்யுங்கள்..மாமாவுக்கு ஒன்னும் முடியல….இப்படியே கூவி கூவி தான் இன்றைக்கு உள்ளே இருக்கிறீர்…உறுப்படியா எதையும் செய்யல…
டியர் சாந்தி,உங்களக்கு எது solleh vtkamma எல்லையாஹ்?